செங்கல்பட்டு இளைஞர்களே தயாரா…! 18-ந்தேதி‌ மெகா வேலைவாய்ப்பு முகாம்…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் வருகின்ற 18ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 3 மணிவரை மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக ஒவ்வொரு மாதமும் 2-வது அல்லது 3-வது வெள்ளிக்கிழமை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதுதவிர ஒவ்வொரு ஆண்டும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட அளவில் நடத்தப்பட்டு வருகிறது. 

அந்த வகையில், 2023-ம் ஆண்டிற்கான மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 18-ந்தேதி (சனிக்கிழமை) செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வித்யாசாகர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்த உள்ளது.

இந்த முகாமில் 150-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கான மனிதவள தேவைக்குரிய நபர்களை நேர்முகத் தேர்வு நடத்தி தேர்வு செய்ய உள்ளார்கள்.

கல்வி தகுதி:

எட்டாம் வகுப்பு, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு பி.இ., ஐடிஐ மற்றும் டிப்ளமோ, செவிலியர்கள். 

வயது வரம்பு:

18 முதல் 40 வரை

நடைபெறும் இடம்:

வித்யாசாகர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி. 

•இந்த முகாமில் கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

•இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமனம் பெறுபவர்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.

•மேலும் முகாமில் பங்கு பெற விருப்பமுள்ளவர்கள் மற்றும் வேலை தேடும் இளைஞர்கள் https://tnprivatejobs.tn.gov.in இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.