திருச்சி போலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்து தாக்குதல்… பெண் போலீசை தள்ளிவிட்டு வெறியாட்டம்!

திருச்சியில்

கோஷ்டிகளுக்குள் நடந்த மோதல் தான் இன்றைய ஹாட் டாபிக்காக பேசப்பட்டு வருகிறது. அதுவும் ஆளுங்கட்சியாக இருந்து கொண்டு இப்படிப்பட்ட அத்துமீறலில் ஈடுபடுவது பெரும் கண்டனத்தை சம்பாதித்துள்ளது. சிசிடிவி காட்சிகள் மூலம் எப்படியும் சிக்கிக் கொள்வோம் என்று தெரிந்தும் ஆளுங்கட்சி என்ற திமிறில் பட்டப் பகலில் தைரியமாக உருட்டுக் கட்டைகளை கொண்டு தாக்கியிருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

தவித்த போலீசார்

இவர்களை தடுக்க முடியாமல் காவல்துறையினர் பட்ட பாடு தான் பெரிது. முன்னதாக திமுக எம்.பி

வீட்டிற்கு அருகில் பேட்மிண்டன் அரங்கு திறப்பு விழாவில் கல்வெட்டில் பெயரில்லை என்ற புகார் தான் மையக் கருவாக இருந்துள்ளது. இதைக் கண்டித்து திருச்சி சிவா ஆதரவாளர்கள் கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

vs திருச்சி சிவா

உங்களுக்கு அவ்வளவு தைரியம் வந்துவிட்டதா? என்று அமைச்சர் கே.என்.நேரு ஆதரவாளர்கள் ஒன்று சேர்ந்து திருச்சி சிவா வீட்டிற்கு முன்பிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கினர். நாற்காலிகளை உடைத்து எறிந்தனர். அப்போது போலீசார் தடுக்க முயன்றும், சமாதான பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்தும் உடன்படவில்லை. அவர்களை தள்ளிவிட்டு வேகமாக சம்பவத்தை அரங்கேற்றி விட்டனர்.

இரண்டு முக்கிய புள்ளிகள்

இதில் அமைச்சர் கே.என்.நேருவின் வலதுகரம் முத்துக்குமார், ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ பழனியாண்டி உள்ளிட்டோரை பார்க்க முடிந்ததாக ’சமயம் தமிழுக்கு’ அளித்த பேட்டியில் திருச்சி சூர்யா தெரிவித்திருந்தார். பின்னர் சம்பவம் தொடர்பாக கே.என்.நேரு ஆதரவாளர்கள் சிலரை கைது செய்தனர். உடனே இருதரப்பும் மாறி மாறி புகார் அளிக்க திருச்சி செசன்ஸ் கோர்ட் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளனர்.

போலீஸ் ஸ்டேஷனில் அதிர்ச்சி

அங்கு இருதரப்பிற்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் காவல் நிலையத்திற்குள் இருந்த திருச்சி சிவா ஆதரவாளர்களை தாக்க வெளியில் இருந்து கே.என்.நேரு ஆதரவாளர்கள் வேகமாக வந்தனர். அவர்களை பெண் போலீசார் ஒருவர் தடுக்க முயற்சித்தார். ஆனால் திமுகவினர் மிகவும் ஆக்ரோஷத்துடன் நுழைய முயன்றனர்.

பெண் போலீஸ் காயம்

தொடர்ந்து முயற்சித்தும் அந்த பெண் போலீசால் தடுக்க முடியவில்லை. இந்த சூழலில் அவரை தள்ளிவிட்டு விட்டு உள்ளே நுழைந்தனர். இதில் பெண் போலீஸ் காயம் அடைந்தார். உள்ளே வந்ததும் நாற்காலிகளை எடுத்து திருச்சி சிவா ஆதரவாளர்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்தப்பட்டது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இருதரப்பிலும் கைது

காயமடைந்த பெண் போலீஸ் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கே.என்.நேரு மற்றும் திருச்சி சிவா ஆதரவாளர்கள் தரப்பில் மாறி மாறி அளிக்கப்பட்ட புகாரின் பேரில் 30 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திருச்சி செஷன்ஸ் கோர்ட் நீதிமன்றத்தில் நடந்த தாக்குதல் தொடர்பாக திருப்பதி என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.