தேசிய பௌதீகத் திட்டம், இறுதி ஒப்புதலுக்காக ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படும்…

தேசிய பௌதீகத் திட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இறுதி ஒப்புதலுக்காக ஏப்ரல் மாதம் சமர்ப்பிக்கப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் அனுமதி கிடைத்த பின்னர் தேசிய பௌதீக திட்டம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்றுக்கொள்ளப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். இது தவிர அது வர்த்தமானியில் வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தேசிய பௌதீகத் திட்டம் பாராளுமன்றம் மற்றும் பாராளுமன்றத்தின் அமைச்சின் ஆலோசனைக் குழுவிடம் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

“தேசிய பௌதீக திட்டம்-2048” தயாரிப்பது தொடர்பாக பத்தரமுல்லை, செத்சிறிபாயவிலுள்ள தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று (14) நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

தற்போது தயாரிக்கப்பட்டு வரும் தேசிய பௌதீகத் திட்டம், தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு.காமினி ஹேவகேவினால் அமைச்சின் செயலாளர் திரு.W.S.சத்யானந்தவிடம் கையளிக்கப்பட்டது.

முதலாவதாக இந்நாட்டில் 2007 இல் தேசிய பௌதீகத் திட்டம் தயாரிக்கப்பட்டது. பின்னர் அது 2019 இல் புதுப்பிக்கப்பட்டது. தேசிய பௌதீகத் திட்டம் – 2048ன் கருப்பொருள் “ஒரு திட்டமிடப்பட்ட நிலை பேறான வளமான தேசம்” என்பதாகும்.

தேசிய பௌதீகத் திட்டங்கள் பல்வேறு துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அறிஞர்களின் கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை எடுத்துக்கொண்டு தயாரிக்கப்படுகின்றன. தற்போது தயாரிக்கப்பட்டு வரும் தேசிய பௌதீகத் திட்டம், அமைச்சின் செயலாளர்கள் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டு அவர்களின் கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளன.

 தேசிய பௌதீக திட்டமிடல் குழுவின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. அதன் பிரதித் தலைவர் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் திரு. பிரசன்ன ரணதுங்க தலைமையில் இது இடம்பெற்றுள்ளது. குழுவின் செயலாளர் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் ஆவார்.

இந்த தேசிய பௌதீக திட்டம் தற்காலத்திற்கு ஏற்றவாறு புதுப்பிக்கப்பட வேண்டுமென அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட் டார்.

புதுப்பித்தலுக்காக குறிப்பிட்ட காலக்கெடுவை அமைக்கவும் அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

அபிவிருத்தித் திட்டங்களில் ஈடுபடும் நிறுவனங்களை ஒருங்கிணைப்பதில் தாமதம் ஏற்படுவதால், அபிவிருத்தித் திட்டங்களை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்படுவதுடன், பொதுமக்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், சாங்கம் மாறும்போது, தேசிய திட்டங்களில் ஏற்படும் மாற்றம், நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது. இது நாட்டின் வளர்ச்சிக்கும் தடையாக உள்ளது.

எவ்வாறாயினும், தேசிய பௌதீக திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கொள்கைகள் மற்றும் திட்டங்களை அமுல்படுத்துவதன் மூலம் அபிவிருத்தி திட்டங்கள் மிகவும் பயனுள்ளதாக அமையும் எனவும் மக்களின் தேவைகள் நிவர்த்தி செய்யப்படும் எனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டார்.

அதன்படி, . தேசிய பௌதீக திட்டத்தின் கொள்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களின்படி நாட்டின் வளர்ச்சிக்கு சிறப்பு பங்களிப்பு வழங்கப்படுபவையாக நகர அபிவிருத்தி, நெடுஞ்சாலைகள், அதிவேக நெடுஞ்சாலைகள், புகையிரத, போக்குவரத்து கேந்திர நிலையங்கள் போன்ற அனைத்து அபிவிருத்தி செயன்முறைகளையும் முன்னெடுப்பதன் மூலம் தற்போது நாடு எதிர்நோக்கும் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகளை பெருமளவு குறைக்க முடியும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

எனவே, நாட்டின் சகல பிரதேசங்களையும் உள்ளடக்கும் வகையில் அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கும், பாதுகாக்கப்பட வேண்டிய பகுதிகளை இனங்கண்டு அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் இந்த தேசிய பௌதீக திட்டம் மிகவும் முக்கியமானது என நகர அபிவிருத்தி மற்றும் அமைச்சர் திரு.பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். தேசிய பௌதீக திட்டத்தை தயாரிக்கும் போது நாட்டின் தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கு இடையூறு ஏற்படாத வகையில் அதனை தயாரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ்.சத்தியானந்தா, தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் காமினி ஹேவகே உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.