அதானி விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை இயக்குனரிடம் விசாரணை நடத்தக்கோரி புகாரளிக்க, சுமார் 18 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், 144 தடை உத்தரவை மீறி பேரணியாக சென்றனர்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் அலுவல்களும், ராகுல் காந்தி மற்றும் அதானி விவகாரம் தொடர்பான பாஜக மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியால் மூன்றாவது நாளாக முடங்கியது.
முன்னதாக, நாடாளுமன்றத்தில் இருந்து அமலாக்கத்துறை அலுவலகம் வரை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேரணி செல்ல முடிவெடுத்த நிலையில், விஜய் சவுக் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு, 144 தடை அமல்படுத்தப்பட்டது.
தடையை மீறி பேரணி சென்ற எம்.பி-க்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சியினர், அமலாக்கத்துறையினரிடம் கூட்டுப்புகார் அளிக்கப்பட்டு பின்னர் வெளியிடப்படும் என தெரிவித்தனர்.