பிரித்தானியாவின் ஃபாரெஸ்டர் உயர்நிலைப் பள்ளியில் டீனேஜ் சிறுவன் ஒருவர் சரிந்து விழுந்த பிறகு உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறுவன் உயிரிழப்பு
செவ்வாய் கிழமை மதியம் எடின்பர்க்-கில்(Edinburgh) உள்ள ஃபாரெஸ்டர் உயர்நிலைப் பள்ளியில்(Forrester High School) 15 வயதான ஆண்ட்ரூ மக்கின்னன் என்ற டீனேஜ் சிறுவன் மருத்துவ பாதிப்பு ஏற்பட்டு நிலைக் குலைந்து சரிந்து விழுந்துள்ளான்.
இதையடுத்து பள்ளி நிர்வாகம் அவசரக் குழுவினர்களுக்கு அழைப்பு விடுத்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த ஸ்காட்லாந்து பொலிஸார் பள்ளி மாணவன் இறந்துவிட்டதை உறுதிப்படுத்தினர்.
பள்ளி மாணவனின் மரணம் சந்தேகத்திற்குரிய ஒன்றாக கருதப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இது தொடர்பாக வழக்கறிஞர் நிதிக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
அஞ்சலி
உயிரிழந்த மாணவன் குறித்து, ஃபாரெஸ்டர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டீபன் ராஃபர்டி பாராட்டி பேசியுள்ளார்.
அதில், ஆண்ட்ரூ-வின்(Andrew MacKinnon) மறைவால் எங்கள் பள்ளி மற்றும் உள்ளூர் சமூகம் அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்துள்ளது.
Media Scotland
ஆண்ட்ரூ மக்கின்னன், மிகவும் விரும்பத்தக்க பாத்திரம், அவரை அறிந்த அனைவராலும் விரும்பப்பட்டார். “இந்த கடினமான நேரத்தில் ஆண்ட்ரூ-வின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள் உள்ளன” என வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் பொதுமக்கள் உள்ளூர் தேவாலயத்திற்கு அழைக்கப்பட்டனர், அங்கு ஆண்ட்ரூவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டது.