Dhanush: ஐஸ்வர்யாவுக்கு துரோகம் செய்த தனுஷ்?: யோவ் டுபாக்கூர், கையில கெடச்ச, அவ்ளோ தானு விளாசும் ரசிகாஸ்

Dhanush, Aishwarya Rajinikanth Divorce: ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு தனுஷ் துரோகம் செய்துவிட்டதாக பாலிவுட் விமர்சகர் உமைர் சந்து ட்வீட் செய்திருக்கிறார்.

​தனுஷ், ஐஸ்வர்யா​தனுஷின் காதல் கொண்டேன் படத்தை பார்க்கச் சென்றபோது அவரை பார்த்து காதலில் விழுந்தார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். காதலை வீட்டில் சொல்லி பெற்றோர் சம்மத்ததுடன் திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் திருமணமாகி 18 ஆண்டுகள் கழித்து கடந்த 2022ம் ஆண்டு ஜனிவர் மாதம் பிரிவை அறிவித்தார்கள்.

​பிரிவு​ஐஸ்வர்யாவும், தனுஷும் பிரிந்து வாழ்ந்து வந்தபோதிலும் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகவில்லை. மீண்டும் திருமணம் செய்து கொள்ளும் ஐடியா இல்லாததால் விவாகரத்து கோரவில்லை என்று கூறப்பட்டது. இந்நிலையில் விவாகரத்து கோரி சென்னையில் இருக்கும் நீதிமன்றத்தில் தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் விண்ணப்பித்துள்ளார்கள் என பாலிவுட் விமர்சகரான உமைர் சந்து தெரிவித்துள்ளார்.
​ட்வீட்​உமைர் சந்து ட்விட்டரில் கூறியிருப்பதாவது, தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் விவாகரத்து கோரி சென்னை சிவில் நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளனர். வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்து ஐஸ்வர்யாவை ஏமாற்றிவிட்டார் தனுஷ் என தெரிவித்துள்ளார்.
​விளாசல்​உமைர் சந்துவின் ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் கூறியிருப்பதாவது, நீங்களே ஒரு டுபாக்கூர். நீங்கள் சொல்வதை எல்லாம் நம்ப முடியாது. நீங்க மட்டும் கையில கெடச்சீங்க, அவ்வளவு தான். நாங்கள் விவாகரத்து கோரி விண்ணப்பித்துள்ளோம் என தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் சொல்லும் வரை நம்ப மாட்டோம். தனுஷ் பெயரை கெடுக்கவே இப்படி அவர் மீது பழி போடுகிறீர்கள் என தெரிவித்துள்ளனர்.
​விவாகரத்து​சமூக வலைதளவாசிகள் கூறியிருப்பதாவது, ஒரு வேளை விவாகரத்து கோரியிருப்பார்களோ. அதனால் தான் யாத்ரா, லிங்காவின் பள்ளி விழாவில் தனுஷ் கலந்து கொள்ளவில்லை போன்று. போயஸ் கார்டனில் ரூ. 150 கோடி செலவில் பங்களா கட்டி அண்மையில் குடியேறினார் தனுஷ். புதுமனை புகுவிழாவில் யாத்ரா, லிங்கா கலந்துகொள்ளவில்லை. ஒரு வேளை கதம் கதம் போல என்கிறார்கள்.
​கெரியர்​தனுஷை பிரிந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீண்டும் படம் இயக்கத் துவங்கிவிட்டார். விஷ்ணு விஷால், விக்ராந்த், ஜீவிதா ராஜசேகர் உள்ளிட்டோரை வைத்து லால் சலாம் படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்தில் தனுஷின் அண்ணன் செல்வராகவன் நடிக்கிறாராம். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கவுரவத் தோற்றத்தில் வருகிறார். படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தனுஷோ அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

​Dhanush: ஆசைப்பட்டது தனுஷ், கிடைச்சது செல்வராகவனுக்கு: காரணம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.