Dhanush, Vada Chennai: தனுஷின் வட சென்னை படத்துல இப்படி ஒரு விஷயமா? அம்பலப்படுத்திய இசையமைப்பாளர்!

வெற்றி மாறன் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான படம் வட சென்னை. இந்தப் படத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் லீடிங் ரோலில் நடித்திருந்தனர். மேலும் ஆண்ட்ரியா ஜெர்மையா, கிஷோர், சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர். வட சென்னை மக்களின் வாழ்வியலை பேசிய இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் படத்தில் நடித்திருந்த அனைவருமே தங்களின் வேலையை கச்சிதமாக செய்திருந்தனர் என்றும் பாராட்டுக்கள் குவிந்தன.

இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். இப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானது. வெற்றிமாறன் இயக்கத்தில் தற்போது தனது ‘விடுதலை’ படம் உருவாகியுள்ளது. இந்தப் படம் இம்மாத இறுதியில் வெளியிடப்படவுள்ள நிலையில் இதன் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அப்போது வடசென்னை 2 படம் குறித்த தனது திட்டத்தை கூறியிருந்தார் இயக்குநர் வெற்றிமாறன்.

Sherin: ப்பா… பாவாடை தாவணியில் ஹாட்னஸ் காட்டும் ஷெரின்… கிறங்க வைக்கும் க்ளிக்ஸ்!

இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயண் வட சென்னை படம் குறித்த பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார். அதன்படி வட சென்னை திரைப்படத்தின் அன் கட் வெர்ஷன் 5 மணி நேரம் கொண்டது என கூறியுள்ளார். மேலும் அந்த 5 மணி நேர படமும் பிரம்மாதமாக இருந்ததாகவும் வெறித்தனமாக இருந்தது என்றும் தெரிவித்துள்ளார் சந்தோஷ் நாராயணன்.

வடசென்னை திரைப்படம் மிகவும் நீளமாக இருந்ததால், பின்னர் எடிட் செய்யப்பட்டு 3 மணி நேர கதையாக குறைக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார் சந்தோஷ் நாராயணன்.

மேலும், ‘வட சென்னை’ படத்தை வெப் சீரிஸாக வெளியிட விரும்புகிறீர்களா என்று இயக்குனர் வெற்றிமாறனிடம் தான் கேட்டதாகவும் அவர் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Trisha, Vijay: ‘த்ரிஷா என் பொண்டாட்டி.. விஜய் விரல் படக்கூடாது.. விக்ரம் செத்துடுவான்’ ஆபாசமாக பேசும் ஏஎல் சூர்யா!

தற்போது ‘வட சென்னை 2’ படத்தின் பணிகள் தொடங்க உள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். வட சென்னை படம் வெளியாகி பட்டையை கிளப்பிய போதே இதன் இரண்டாம் பாகம் வருமா என ரசிகர்கள் கேட்டு வந்தனர். இந்நிலையில் வட சென்னை படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.