The elephant whisperers: ஆஸ்கர் விருது வென்ற the elephant whisperers தம்பதி ஸ்டாலினுடன் சந்திப்பு!

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று முன்தினம் ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் இடம் பெற்றிருந்த ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடல் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான பிரிவில் ஆஸ்கர் விருது கிடைத்தது. இந்த விருதை ஆர்ஆர்ஆர் படத்தின் இசையமைப்பாளரான கீரவாணியும் நாட்டு நாட்டு பாடலை எழுதிய சந்திர போஸும் பெற்றுக் கொண்டனர். இதேபோல் நீலகிரி மாவட்டம் முதுமலையில் தயாரான ‘தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ்’ என்ற ஆவணப்படம் ஆஸ்கர் விருதினை பெற்றது.

Trisha, Vijay: ‘த்ரிஷா என் பொண்டாட்டி.. விஜய் விரல் படக்கூடாது.. விக்ரம் செத்துடுவான்’ ஆபாசமாக பேசும் ஏஎல் சூர்யா!

தாயை பிரிந்த குட்டி யானைகளுக்கும், அந்த யானைகளை பராமரிக்கும் பழங்குடியின தம்பதியான பொம்மன், பெள்ளி ஆகியோருக்கு இடையிலான உறவே தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படம். இந்தப் படம் ஆஸ்கர் விருதை பெற்ற நிலையில் இந்த படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதியினருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆஸ்கர் விருது வென்ற தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதியனரை நேரில் அழைத்து இன்று சந்தித்தார். சென்னை தலைமை செயலகத்தில் அவர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், பொம்மன், பெள்ளி தம்பதியர் இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Ajith: அந்த படம் ஃபிளாப் ஆனதுக்கு காரணம் அஜித்துதான்… பழி போடும் இயக்குநர்!

மேலும் நினைவு பரிசு வழங்கிய முதல்வர் முக ஸ்டாலின் இருவருக்கும் தலா ஒரு இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளையும் வழங்கினார். தொடர்ந்து பொம்மன், பெள்ளி தம்பதிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முதல்வரை சந்தித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த பொம்மன், பெள்ளி தம்பதியினர் இரண்டு யானை குட்டிகளை வளர்த்து கொடுத்துள்ளோம், இது முதுமலை வனத்துறைக்கே மிகப்பெரிய பெருமை என்றனர்.

Meena: நடிகரின் திருமணத்தால் நொறுங்கிப்போன மீனா… அம்பலமான ரகசியம்!

மேலும் ஆவண படத்தில் நடித்தது முதல்வர் வரை வந்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது என்றும் யானை வளர்ப்பு சாதாரண விஷயம் இல்லை என்றும் கூறினர். மேலும் யானை வழித்தட பாதைகளை ஆக்கிரமிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் அதிகாரிகள் சொல்வதை மக்கள் பின்பற்ற வேண்டும் என்றும் பொம்மன் பெள்ளி தம்பதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த ஆவணப்படத்தை வன புகைப்பட கலைஞர் கார்த்திகி உருவாக்கியிருந்தார். தனது முதல் படத்திலேயே ஆஸ்கர் விருதை பெற்றுள்ளார் கர்த்தகி என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.