Vijay, Jawan: பாலிவுட் போகும் விஜய்: ஜவானில் கெத்து காட்டப் போறார் தளபதி

ராஜா ராணி படம் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தவர் அட்லி. விஜய்யை வைத்து ஒரு படமாவது இயக்கிவிட மாட்டோமா என பல இயக்குநர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் இரண்டாவது படத்திலேயே விஜய்யை இயக்கினார். தெறியை அடுத்து மெர்சல், பிகில் என அடுத்தடுத்து விஜய்யை வைத்தே படம் எடுத்து ரிலீஸ் செய்து வெற்றி கண்டார் அட்லி.

இந்த ஆளுக்கு மட்டும் எப்படிய்யா விஜய் கால்ஷீட் கிடைச்சுக்கிட்டே இருக்கு என ரசிகர்களும், பிரபலங்களும் வியந்த நேரத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கானை இயக்கும் வாய்ப்பு அட்லிக்கு கிடைத்தது.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

கோலிவுட்டில் மூன்று படம் இயக்கியாச்சு. இது பாலிவுட் போகும் நேரம் என மும்பைக்கு கிளம்பிவிட்டார் மனிதர். தான் பாலிவுட் செல்லும்போதே தன் முதல் படத்தின் ராசியான ஹீரோயினும், அக்காவுமான நயன்தாராவையும் கையோடு அழைத்துச் சென்றிருக்கிறார்.

ஆம், ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் நயன்தாரா. அக்காவை அடுத்து அண்ணன் விஜய்யையும் பாலிவுட்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று முடிவு செய்தார் அட்லி.

அவர் நினைத்தால் தான் விஜய்யிடம் ஈஸியாக டேட்ஸ் வாங்கிவிடுவாரே. வழக்கம் போன்று தம்பி அட்லிக்கு டேட்ஸ் கொடுத்துவிட்டாராம் விஜய். ஜவான் படத்தில் கவுரவத் தோற்றத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறாராம் விஜய்.

10 முதல் 20 நிமிடங்கள் விஜய்யை பார்க்கலாமாம். நீங்க வந்தாலே போதும்ணா, அதுவே எனக்கு மிகப் பெரிய வெற்றி என விஜய்யை ஒரு வழியாக பாலிவுட்டில் அறிமுகம் செய்து வைக்கிறார் அட்லி.

விஜய் யார் என்பது பாலிவுட் பிரபலங்களுக்கும் சரி, ரசிகர்களுக்கும் சரி நன்றாகத் தெரியும். ஆனால் அவர் இதுவரை பாலிவுட் படத்தில் நடித்தது இல்லை. முன்னதாக அக்ஷய் குமாரை வைத்து பிரபுதேவா இயக்கிய ரவுடி ராத்தோர் படத்தில் ஒரு பாடலில் வந்து சென்றார் விஜய்.

அவர் அழகாக ஸ்டெப்ஸ் போட்டதை பார்த்து அக்ஷய் குமார் அசந்து போனது தனிக்கதை. இவருக்கு 16, 17 வயது தான் இருக்கும் போன்று. அப்படி ஆடுகிறாரே என அக்ஷய் குமார் புகழ்ந்து பேசியதை கேட்டு விஜய் ரசிகர்கள் உச்சி குளிர்ந்து போனார்கள்.

டான்ஸுனு வந்துட்டால் தளபதி வேற ரகமாச்சே. அதனால் அக்ஷய் குமார் அசந்ததில் ஆச்சரியம் இல்லை. இந்நிலையில் தான் பான் இந்திய படமாக உருவாகி வரும் ஜவானில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் விஜய்.

அவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து வருகிறது. தன் பிறந்தநாளையொட்டி விஜய்யுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டார் லோகேஷ்.

Lokesh Kanagaraj: இதுவரை ஒரு ஃப்ளாப் கூட கொடுக்காத லோகேஷ் கனகராஜ்: லியோ ஏற்கனவே ரூ. 400 கோடி வசூல்

வெள்ளை நிற உடையில் சும்மா கெத்தாக இருந்தார் விஜய். இது போதுமே எங்களுக்கு இது போதுமே என லோகேஷ் கனகராஜுக்கு விஜய் ரசிகர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.