இரவு பரோட்டா சாப்பிட்டுவிட்டு தூங்கிய இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி வில்லியனூர் பகுதியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் சென்னையில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கொரோனா பரவல் காரணமாக அவர் வீட்டிலிருந்தே வேலைபார்த்து வந்தார்.
இந்நிலையில் அவர் மனைவியுடன் சுல்தான் பேட்டைக்குச் சென்று ஹோட்டலில் பரோட்டா மற்றும் பிரைடு ரைஸ் பார்சல் வாங்கி வந்து வீட்டில் சாப்பிட்டுள்ளனர். பின்னர் இருவரும் தூங்கிவிட்டனர்.
விடியற்காலை சத்தியமூர்த்தியை அவரது மனைவி எழுப்பிய போது அவர் பேச்சு மூச்சின்றி இருந்துள்ளார். பதற்றம் அடைந்த சத்தியமூர்த்தியின் மனைவி அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
அங்கு பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீஸார், பரோட்டா, பிரைடு ரைஸ் சாப்பிட்டதால்தான் சத்தியமூர்த்தி உயிரிழந்தாரா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in