சர்வதேச வான்வெளியில் தாக்குதல் நடத்திய ரஷ்ய போர் விமானம்! வீடியோ ஆதாரத்தை வெளியிட்ட அமெரிக்கா


சர்வதேச வான்வெளியில் அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தின் மீது ரஷ்யாவின் போர் விமானம் எரிபொருளை கொட்டும் வீடியோவை அமெரிக்கா வெளியிட்டது.

அமெரிக்க ஆளில்லா விமானத்தை தாக்கிய ரஷ்யா

மார்ச் 14 செவ்வாயன்று கருங்கடலுக்கு மேல் சர்வதேச வான்வெளியில் அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான MQ-9 ரக ஆளில்லா விமானத்தை, ரஷ்யாவின் ஆயுதமேந்திய Su-27 ரக போர் விமானம் எரிபொருளை கொட்டும் ஒரு நிமிடம் நீளமான வீடியோ காட்சியை அமெரிக்கா இன்று வெளியிட்டது.

அமேரிக்கா இந்த தாக்குதலை “பாதுகாப்பற்ற அல்லது தொழில்முறையற்ற இடைமறிப்பு” என்று அழைக்அழைக்கிறது.

சர்வதேச வான்வெளியில் தாக்குதல் நடத்திய ரஷ்ய போர் விமானம்! வீடியோ ஆதாரத்தை வெளியிட்ட அமெரிக்கா | Russian Jet Dumped Fuel On Us Drone Over Black Sea

அமெரிக்கா வெளியிட்ட வீடியோ 

ட்விட்டரில் US European Command வெளியிட்ட இந்த வீடியோ காட்சியில், ரஷ்ய போர் விமானம் அமெரிக்காவின் ஆளில்லா ட்ரோனின் பின்புறத்தை நெருங்குவதைக் காட்டுகிறது, அது அதைக் கடந்து செல்லும்போது எரிபொருளை வெளியிடத் தொடங்குகிறது.

ரஷ்ய விமானம் கடந்து செல்லும்போது வீடியோ பரிமாற்றம் திடீரென தானாக நிறுத்தப்படுகிறது. வீடியோவில் ட்ரோனின் ப்ரொப்பல்லரை அப்படியே பார்க்க முடியும், மேலும் சில நொடிகளுக்குப் பிறகு ரஷ்ய விமானம் அதை நோக்கி இரண்டாவது அணுகுமுறையைத் தொடங்குகிறது. இந்த நேரத்தில் இன்னும் அருகில் செல்லும் போது அது மீண்டும் அதன் மீது எரிபொருளை வெளியிடுகிறது. இரண்டாவது சூழ்ச்சிக்குப் பிறகு ட்ரோனின் ப்ரொப்பல்லர்களில் ஒன்று சேதமடைந்ததைக் காண முடிந்தது.

ட்ரோன் சேதமடைந்ததையடுத்து, ரஷ்யாவின் இந்த சூழ்ச்சியான தாக்குதலை “பொறுப்பற்றது” என அமெரிக்க இராணுவம் குற்றம்சாட்டியுள்ளது. ஆனால், ட்ரோன் தாக்கப்பட்டதை ரஷ்யா மறுத்துவிட்டது.

 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.