அமெரிக்காவில் மர்ம நபர் ஒருவர் ஹெலிகாப்டரை திருட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹெலிகாப்டர் திருட்டு
அமெரிக்காவின் சாக்ரமெண்டோ விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஹெலிகாப்டர் ஒன்றை மர்ம நபர் ஒருவர் திடீரென திருட முயன்றார்.
ஆனால் இந்த திருட்டு முயற்சியின் போது ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி கவிழ்ந்ததால் மர்ம நபர் உடனடியாக அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
KXTV
விசாரணை
இந்நிலையில் ஹெலிகாப்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த சம்பவத்தில் ஹெலிகாப்டர் அதிக சேதம் அடைந்து இருப்பதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Nathaniel Levine/[email protected]
இதற்கிடையில் ஹெலிகாப்டரை திருட முயன்ற நபரை பொலிஸார் தேடி வரும் நிலையில், தப்பியோடிய நபர் எதற்காக ஹெலிகாப்டரை திருட நினைத்தார் என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.