ஆஸி., ஆற்றில் லட்சக்கணக்கான மீன்கள் இறப்பு: மக்கள் அதிர்ச்சி| Millions of fish die in Aussie river: People shocked

சிட்னி, -ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் லட்சக்கணக்கான மீன்கள் இறந்துள்ள சம்பவம், அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பசிபிக் தீவு நாடான ஆஸ்திரேலியாவின் நியூ சவூத் வேல்ஸ் மாகாணத்தில் டார்லிங் ஆறு செல்கிறது. இந்த ஆற்றில் நேற்று லட்சக்கணக்கான மீன்கள் இறந்து மிதந்தன.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மக்கள், அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீன்வளத்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பின், ஆற்றில் இறந்து மிதந்த மீன்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.

இதற்கிடையே ஆற்றில் லட்சக்கணக்கான மீன்கள் இறந்து மிதக்கும் ‘வீடியோ’ பதிவு, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

டார்லிங் ஆற்றில் மீன்கள் இறப்பது, இது முதல்முறை அல்ல. ஏற்கனவே, 2018ல் கடும் வறட்சி ஏற்பட்டு இதுபோல் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்தன.

இப்போது மீன்கள் இறந்து மிதப்பது குறித்து, நியூ சவூத் வேல்ஸ் மாகாண அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘ஆஸ்திரேலியா முழுதும் கடும் வெப்பநிலை நீடிப்பதால், மீன்களுக்கு தேவையான ஆக்சிஜன் ஆற்று நீரில் குறைந்ததே, இவை இறந்துள்ளதற்கு காரணம்’ என குறிப்பிட்டுள்ளது.

இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் தடுக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.