பெண்கள் பிரிமீயர் லீக்: மும்பைக்கு எதிராக டாஸ் வென்ற உ.பி.வாரியர்ஸ் பந்துவீச்சு தேர்வு…!

மும்பை,

முதலாவது பெண்கள் பிரிமீயர் ‘லீக்’ 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் உள்ள 2 மைதானங்களில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ், உ.பி.வாரியர்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் உள்ளிட்ட 5 அணிகள் ஆடி வருகின்றன.

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். 2வது மற்றும் 3வது இடங்களை பிடிக்கும் அணிகள் எலிமினேட்டர் போட்டியில் மோதும். அதில் வெற்றி பெறும் அணி 2வது அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

போட்டி தொடரின் நேற்றைய நாள் ஓய்வு நாளாகும். அதை தொடர்ந்து இன்று 2 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இந்நிலையில், இன்று நடைபெறும் முதலாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ், உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோத உள்ளன. இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற உ.பி.வாரியர்ஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.