மேலும் 18 மாதங்கள் வரை நிதியுதவிகளை வழங்க உலக வங்கி இணக்கம்


இலங்கையின் கமத்தொழில் மேம்பாட்டுக்கு மேலும் 18 மாதங்கள் வரை நிதியுதவிகளை வழங்க உலக வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.

விவசாயத்துறையில் புதிய தொழிநுட்பங்களை அறிமுகப்படுத்துவதற்கான கமத்தொழில் நவீனமயப்படுத்தல் செயற்திட்டத்துக்கு உலக வங்கியின் நிதியுதவி தொடர்ந்தும் வழங்கப்படவுள்ளது.

உலக வங்கியின் பிரதிநிதிகள் மற்றும் கமத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது அதற்கான இணக்கம் காணப்பட்டுள்ளது.

மகிந்த அமரவீர வேண்டுகோள்

மேலும் 18 மாதங்கள் வரை நிதியுதவிகளை வழங்க உலக வங்கி இணக்கம் | Up To 18 More Months Of World Bank Financing

கமத்தொழில் நவீனமயப்படுத்தல் செயற்திட்டம் தற்போதைக்கு குறிப்பிடத்தக்க செயற்பாடுகளை முன்னெடுத்து உள்ளதாகவும், அதற்கான நிதியுதவிகளை தொடர்ந்தும் வழங்குமாறும் அமைச்சர் மகிந்த அமரவீர இதன்போது வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து எதிர்வரும் மே மாதம் தொடக்கம் மேலும் 18 மாதங்களுக்கு மேற்குறித்த செயற்திட்டத்துக்கான நிதியுதவியை தொடர்ந்தும் வழங்க உலக வங்கியின் பிரதிநிதிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.