‘இந்தியப் பெண்கள் சோம்பேறிகள்’: கண்டன குரலால் மன்னிப்பு கோரிய நடிகை

மும்பை: இந்தியப் பெண்கள் சோம்பேறிகள் என்று கூறிய நடிகை சோனாலி குல்கர்னி, கடும் எதிர்ப்பு கிளம்பியதால் மன்னிப்பு கோரினார். பாலிவுட் நடிகை சோனாலி குல்கர்னி, சமீபத்தில் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் ேபசுகையில், ‘இந்தியப் பெண்கள் சோம்பேறிகள். அவர்கள் தங்களது வாழ்க்கையை உற்சாகமாக்கிக் கொள்வதற்கு பதிலாக, தங்களது தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காக காதலன் அல்லது கணவனைத் தேடுகிறார்கள்’ என்று கூறினார். இவரது இந்த பேச்சுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதையடுத்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ‘நான் பேசிய விஷயங்கள் ெபண்களை காயப்படுத்துவதற்காக அல்ல. அது என்னுடைய நோக்கம் அல்ல. தனிப்பட்ட முறையில் என்னைத் தொடர்பு கொண்டு பாராட்டிய அல்லது விமர்சித்த அனைவருக்கும் நன்றி. எனது கருத்தின் மூலம் பெண்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனித குலத்தையும் சிந்திக்க வைக்க முயற்சித்தேன். நான் பேசியது யாரையாவது புண்படுத்தியிருந்தால், அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இந்த சம்பவத்திலிருந்து நிறைய கற்றுக்கொண்டேன்’ என்று நீண்ட பதிவை வெளியிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.