கை விரித்த உற்ற நண்பனான சவுதி அரேபியா… அதிர்ச்சியில் பாகிஸ்தான்…!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானுக்கு கடன் தேவைப்படும்போதோ, நெருக்கடி ஏற்பட்டதோ அப்போதெல்லாம் சவுதி அரேபியாதான் முதலில் உதவும் நாடாக இருந்தது. ஆனால் இந்த முறை அது நடக்கவில்லை என்று தெரிகிறது. பாகிஸ்தானுக்கு வட்டியில்லா கடனை வழங்க சவுதி அரேபியா மறுத்துவிட்டது. இஸ்லாமிய நண்பரின் இந்த முடிவால் இஸ்லாமாபாத் அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது. பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபட பாகிஸ்தானுக்கு உதவ நட்பு நாடுகள் கூட தயாராக இல்லை என்று பாகிஸ்தான் நிதியமைச்சர் இஷாக் தார் வருத்தமுடன் தெரிவித்துள்ளார். திவால் நிலையை தவிர்க்க பாகிஸ்தானுக்கு அவசரமாக மிகப்பெரிய அளவில் கடன் உதவி தேவைப்படுகிறது. நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு தற்போது வெறும் 3 பில்லியன் டாலர்களாக உள்ளது.

பாகிஸ்தானின் பண வீக்க விகிதம் 33 சதவிகிதத்தை எட்டும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், 1980களில் இருந்து 13வது முறையாக கடன் உதவி தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்துடன் பாகிஸ்தான் “தீவிரமான பேச்சுவார்த்தைகளில்” ஈடுபட்டுள்ளது. விரைவில் ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், பாகிஸ்தானின் கடன் மதிப்பீடு மோசமடைவதால், சர்வதேச கடன்களைப் பெறுவது கடினமாக இருக்கும். சவூதி அரேபியா புதிய கடன்கள் வழங்க,  பல கடுமையான விதிமுறைகளை  அமல்படுத்த வேண்டும் என பாகிஸ்தானை வற்புறுத்தியுள்ளது. அதில்,  நடப்பு கணக்கு பற்றாக்குறை அளவை பெரிதலவு குறைப்பதும் உட்பட கடுமையான பண மற்றும் நிதி சீர்திருத்தங்களை செயல்படுத்துவது ஆகியவை அடங்கும். இவை சர்வதேச நாணய நிதியத்தின் விதிமுறைகளைப் ஒத்ததாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கடும் நெருக்கடியில் உள்ள பாகிஸ்தான் இதனை அமல்படுத்தினால்  ஏற்கனவே உள்ள பணவீக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மேலும் பாதிப்பிற்கு உள்ளாவார்கள். அதனால், மக்களின் கோபத்தை  சந்திக்க நேரிடும்.

மேலும் படிக்க | அதிகரிக்கும் நெருக்கடி… குறைந்தபட்ச கடனாவது தாங்க… கையேந்தும் பாகிஸ்தான்!

பாகிஸ்தானின் ராணுவத் தளபதியின் முயற்சி

கிங் பைசல் ஆராய்ச்சி மற்றும் இஸ்லாமிய ஆய்வு மையத்தின் அசோசியேட் சக உமர் கரீம் கூறுகையில், பாகிஸ்தான் அதிகாரிகள் அதிர்ச்சியில் உள்ளனர். இதுவரை சவுதி அரேபியா மற்றும் பிற வளைகுடா நாடுகள் பாகிஸ்தானுக்கு பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சரின் தொலைபேசி அழைப்பின் பேரில் உதவ முன்வந்தன., ஆனால் இந்த முறை அது நடக்கவில்லை என்று கரீம் கூறினார். பாகிஸ்தானின் இராணுவத் தளபதி தனது சமீபத்திய சவுதி  விஜயத்தின் போது, ​​பாகிஸ்தானுக்கு நிதி உதவிக்காக சவுதி இளவரசர் முகமது பின் சல்மானிடம் கோரிக்கையை வைத்தார். ஆனால், சவுதி இளவரசர் அதனை ஏற்கவில்லை என கூறப்படுகிறது

கொள்கையை மாற்றிய சவுதி அரேபியா 

சவுதி தனது நிதி கொள்கையை மாற்றிக் கொண்டுள்ளது என்று கரீம் நம்புகிறார். பாகிஸ்தானின் இராணுவத் தளபதி இதுவரை நட்பு நாடுகளுக்கு “உறுதியளிக்கும் ஆதாரமாக” இருந்து வருகிறார் என்று அவர் கூறினார். ஜனவரி மாதம் டாவோஸில் நடந்த உலகப் பொருளாதார மாநாட்டில், சவூதி அரேபியாவின் நிதி அமைச்சர், நாட்டின் புதிய பொருளாதாரக் கொள்கையை விளக்கினார். முகமது அல்-ஜடான் இது குறித்து கூறுகையில், ‘நாங்கள் எந்த நிபந்தனையும் இல்லாமல் நேரடியாக மானியங்கள் மற்றும் முதலீடுகளை வழங்குகிறோம், ஆனால்  மக்களிடம் வரி விதிக்கிறோம். மற்றவர்களும் அதையே செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். ‘நாங்கள் உதவ விரும்புகிறோம் ஆனால் நீங்களும் நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்’ என்று அவர் தெளிவாகச் சொன்னார்’ எனக் கூறினார்.

மேலும் படிக்க | தன் வினை தன்னை சுடும்…. பாகிஸ்தானை விழுங்க ஆரம்பிக்கும் பயங்கரவாத அரக்கன்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.