சொத்து பிரிப்பதில் பெண்களுக்கு பாரபட்சம் : ஷரியத் சட்டத்தை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு| Court case against Shariah law that discriminates against women in property division

புதுடில்லி : பெற்றோரின் சொத்துக்களை பிரிப்பதில் ஷரியத் சட்டம் முஸ்லிம் பெண்களுக்கு பாரபட்சம் காட்டுவதாக கூறி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

புஷாரா அலி என்ற பெண், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

மூதாதையர் மற்றும் பெற்றோரின் சொத்துக்களை பிரித்து பகிர்வது தொடர்பான விஷயத்தில் ஷரியத் எனப்படும் முஸ்லிம் தனி நபர் சட்ட விதிகள் பெண்களுக்கு பாரபட்சமாக உள்ளன.

ஷரியத் சட்டம் பிரிவு 2ன்படி, என் மூதாதையர் சொத்துக்களை பிரிந்து பகிர்ந்து கொள்ளும்போது, என் சகோதரருக்கு கிடைக்கும் சொத்தில் பாதி தான் எனக்கு கிடைக்கிறது. என் சகோதரருக்கு கிடைப்பது போல், எனக்கு சரி பங்கு கிடைப்பது இல்லை.

இது, ‘மதம், இனம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் எந்த பாரபட்சமும் காட்டப்படக் கூடாது’ என்ற அரசியல் அமைப்பு சட்ட விதிகள், 15வது பிரிவை மீறுவதாக உள்ளது. இது குறித்து விசாரித்து, சொத்தில் எனக்கும் சரி பங்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இது குறித்து பரிசீலித்த நீதிபதிகள் கிருஷ்ண முராரி, சஞ்சய் கரோல் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியத்துக்கு ‘நோட்டீஸ்’ அனுப்ப உத்தரவிட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.