தனியாளாய் போராடிய கேப்டன் திமுத் கருணரத்னே! பாலோ ஆன் ஆன இலங்கைவெல்லிங்டன் டெஸ்டில் இலங்கை அணி பாலோ ஆன் ஆனதைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கியுள்ளது.

இரட்டை சதம் விளாசிய வீரர்கள்

Basin Reserve மைதானத்தில் நடந்து வரும் 2வது டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 580 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

கேன் வில்லியம்சன் 215 ஓட்டங்களும், ஹென்றி நிக்கோல்ஸ் ஆட்டமிழக்காமல் 200 ஓட்டங்களும் எடுத்தனர்.

அதன் பின்னர் களமிறங்கிய இலங்கை அணி ஹென்றி, பிரேஸ்வெல் ஆகியோரின் பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்தது.

எனினும் தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் திமுத் கருணரத்னே நங்கூரம் போல் நின்று ஆடினார். அவருடன் 5வது விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்த சண்டிமல் 37 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் வந்த வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். இலங்கை அணி இறுதியில் 164 ஓட்டங்களுக்கு சுருண்டது.

தனியாளாய் போராடிய இலங்கை கேப்டன்

கடைசி வரை தனியாளாய் போராடிய திமுத் கருணரத்னே 89 ஓட்டங்கள் எடுத்து 9வது விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.

நியூசிலாந்து தரப்பில் ஹென்றி, பிரேஸ்வெல் தலா 3 விக்கெட்டுகளும், சௌதீ மற்றும் டிக்னர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இலங்கை அணி பாலோ ஆன் ஆனதால் இரண்டாவது தொடங்கி விளையாடி வருகிறது. ஒஷாட பெர்னாண்டோ 5 ஓட்டங்களில் வெளியேற, திமுத் கருணரத்னே மற்றும் குசால் மெண்டிஸ் களத்தில் உள்ளனர்.  Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.