பொது தேர்வு எழுத 75% வருகைப் பதிவு அவசியம் – அமைச்சர் அன்பில் மகேஸ்

தஞ்சாவூர்: பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தஞ்சாவூரில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அரசு பொதுத் தேர்வெழுத ஆண்டுக்கு 3 நாட்கள் பள்ளிக்கு வந்தாலே ஹால் டிக்கெட் வழங்கப்படும் என நான் கூறவில்லை.

அது, தவறான செய்தி. கடந்த ஆட்சியில் கரோனா காலத்தில் இந்த வழிமுறை பின்பற்றப்பட்டது.

பள்ளிக்கு 75% வருகைப் பதிவு உள்ள மாணவர்களுக்கு மட்டுமே அரசு பொது தேர்வு எழுத ஹால் டிக்கெட் தரப்பட்டது. வரும் கல்வியாண்டிலும் இதே நடைமுறை பின்பற்றப்படும் என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.