அப்பாவையும் அக்காவையும் கொன்றது ஏன்? டப்பிங் கலைஞர் பகீர் வாக்குமூலம்!

தந்தையையும் சகோதரியையும் கொலை செய்தது ஏன் என டப்பிங் கலைஞர் அளித்துள்ள வாக்குமூலம் பரபரப்பை கிளப்பியுள்ளது.

நடிகை சாந்திமாங்காடு, அடிசன் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் செல்வராஜ். 65 வயதான இவர் இசை பயிற்சி ஆசிரியராக இருந்தார். இவரது மனைவி சாந்தி தமிழ் சினிமாவில் துணை நடிகையாக உள்ளார். செல்வராஜுக்கும் சாந்திக்கும் இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளார். இளைய மகன் பிரகாஷ் மட்டும் தங்களுடன் வசித்து வந்தார்.
​ அப்பா அக்கா கொடூர கொலை… நடிகையின் மகன் வெறிச்செயல்… சென்னையில் பயங்கரம்!​
அக்கா அப்பா கொலைமூத்த மகன் படைப்பை பகுதியிலும் மகள் பிரியா அதே பகுதியில் உள்ள பாண்டியன் நகர் பகுதியில் கணவர் மற்றும் குழந்தையுடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை தனது தந்தை செல்வராஜையும், அக்கா பிரியாவையும், பிரகாஷ் கொடூரமாக கழுத்தை அறுத்து கொலை செய்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
​ Actor: கணவரை பிரிந்த நடிகையுடன் லிவ் இன் – இல் இருக்க ஆசைப்படும் சிங்கிள் நடிகர்!​
வாக்குமூலம்இதுகுறித்து மாங்காடு போலீசார் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய பிரகாஷை கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக் தகவல்களை வாக்குமூலமாக அளித்துள்ளார். அதன்படி கொலை செய்யப்பட்ட செல்வராஜ் வசதியாகவும் நல்ல மதிப்பு மரியாதையுடனும் இருந்து வந்துள்ளார். அவர்களில் வீட்டில் உள்ள அனைவருமே படித்துவிட்டு நல்ல வேலையில் வசதி வாழ்க்கையில் இருந்து வந்துள்ளனர். ​ Aishwarya Rajinikanth: ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு வந்த கோபம்.. லால் சலாம் படப்பிடிப்பில் நடந்தது என்ன?​
போதை பழக்கத்திற்கு அடிமைமூத்த மகனுக்கும் மகளுக்கும் திருமணம் ஆன நிலையில் கடைசி மகனான பிரகாஷூக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் நண்பர்களின் சகவாசத்தால் பிரகாஷ் மது மற்றும் கஞ்சா போதை பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதனால், அவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து குடும்பத்தினர் அவரை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.
​ Rohini: ரகுவரன் இப்போது இருந்திருந்தால்… மறைந்த கணவரை நினைத்து உருகிய ரோகினி!​
மன நல மருத்துவமனைஆனாலும் நோய் முற்றிலும் குணமாகாததால் பிரகாஷ் அடிக்கடி தனிமையில் பேசிக் கொண்டிருந்ததோடு குடும்பத்தில் இருப்பவர்களிடமும் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டுள்ளார். இதையடுத்து அவரை மீண்டும் அயனாவரத்தில் உள்ள அரசு மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ப்பது குறித்து, அவரது அம்மாவும், அக்காவும் கடந்த வாரம் வீட்டில் பேசிக்கொண்டிருந்தனர்.
​ திட்டம்போட்டு நினைத்ததை சாதித்த ஜோதிகா!​
கொலை செய்ய திட்டம்இதனை ஒட்டுக் கேட்ட பிரகாஷ் கடும் கோபம் அடைந்துள்ளார். தன்னை வேண்டுமென்றே மருத்துவமனையில் சேர்க்க திட்டமிடுவதாக நினைத்த அவர், குடும்பத்தில் உள்ள அனைவரையும் கொலை செய்ய முடிவு செய்ததாக தெரிவத்துள்ளார். முதல் கட்டமாக அம்மாவை கொலை செய்ய திட்டம் போட்டுள்ளார். ஆனால் அவர் மருந்து வாங்க சென்றதால் தப்பிவிட்டார். அவர் வெளியே சென்றதை பயன்படுத்திக் கொண்ட பிரகாஷ், தூங்கிக் கொண்டிருந்த செல்வராஜை கழுத்தை அறுத்து கொன்றதாக கூறியிருக்கிறார்.
​ Ajith: ஷாலினிக்கு துரோகம் செய்கிறாரா அஜித்? இதை விஜய் ரசிகர்கள் கூட நம்ப மாட்டாங்க!​
சிகிச்சையளிக்க உத்தரவுஅப்பாவை கொன்ற கையோடு நேராக தனது அக்கா வீட்டிற்கு சென்ற பிரகாஷ் அங்கு வைத்து தனது அக்காவின் மாமியார் கண்ணெதிரிலேயே அவரையும் கத்தியால் குத்தி கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து பிரகாஷ் மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து ஸ்ரீபெரம்புதூரில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இதையடுத்து பிரகாஷுக்கு சென்னை அயனாவரத்தில் உள்ள அரசு மனநல மருத்துவமனையில் அனுமதித்து தொடர்ந்து சிகிச்சை அளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
​ Samantha: ‘நான் செஞ்ச பெரிய தப்பே அதுதான்’.. ஓபனா பேசிய சமந்தா?​
பெரும் சோகம்இதையடுத்து அப்பாவையும் அக்காவையும் துடிக்க துடிக்க கொலை செய்த பிரகாஷ் மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். மன நல மருத்துவமனையில் சேர்க்க முடிவு செய்ததால் ஆத்திரத்தில் அப்பாவையும் அக்காவையும் இளைஞர் கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
​ Meena: ‘பப்புக்குலாம் கூப்பிடுவாங்க.. தனியா இருந்ததே இல்லை’ போட்டுடைத்த மீனா!​
Actress Son arrested

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.