தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரம் மாணவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் உதவி தொகை! பட்ஜெட்டின் சிறப்பான அறிவிப்பு!

தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் தாக்கல் செய்து பல புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார்.

அதில் முக்கிய அறிவிப்பில் சில :

ஐஏஎஸ் ஐபிஎஸ் குடிமை பணி தேர்வுகள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரம் மாணவர்களுக்கு முதல்நிலை தேர்வுக்கு தயாராக மாதம் ரூ.7500 வழங்கப்படும். முதன்மை தேர்வுக்கு 25 ஆயிரம் ரூபாய் உதவி தொகையாக ஆண்டுக்கு வழங்கப்படும். இதற்காக 10 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.

* நாட்டின் எல்லைகளை பாதுகாக்கும் போது உயிர்த்தியாகம் செய்த தமிழ்நாட்டை சேர்ந்த படை வீரர்கள் குடும்பத்திற்கு வழங்கப்படும் கருணைத்தொகை 20 லட்சம் ரூபாயிலிருந்து இரு மடங்காக உயர்த்தி 40 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

* வடசென்னை பகுதி மக்களின் மருத்துவ சேவையை நிறைவு செய்யும் வகையில் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய பன்னோக்கு மருத்துவ பிரிவும், செவிலியர் பயிற்சி பள்ளி மற்றும் விடுதிக்கு புதிய கட்டடங்களும் அமைக்க 147 கோடி ரூபாய் செல வில் கட்டப்படும்.

* தெரு நாய்களுக்கான இன விருத்தி கட்டுப்பாட்டு மையம் அமைக்க பத்து கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.

* சென்னை தீவுத்திடலில் திறந்தவெளி காலை அரங்கம் உள்ளிட்ட நகர்ப்புற வளர்ச்சிகள் கொண்டுவரப்படும். கண்காட்சி அரங்குகள் உள்ளிட்டவைக்காக 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

* சென்னை கூவம் அடையாறு நீர் வழித்தடங்களில் 1500 கோடி ரூபாயில் மறு சீரமைப்பு திட்டம் ஏற்படுத்தப்படும்

* அம்பேத்கர் படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்படும்.

* உக்ரைன் போர், உலகளாவிய நிதி நெருக்கடிகள் காரணமாக வரும் ஆண்டில் நிதி ரீதியாக நிறைய சவால்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உள்ளது.

* தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறையை ரூ.30 ஆயிரம் கோடியாக குறைத்துள்ளோம். வரும் ஆண்டுகளில் வருவாய் பற்றாக்குறை மேலும் குறைக்கப்படும்.

* நாட்டின் எல்லைகளை பாதுகாக்கும்போது உயிர்த்தியாகம் செய்யும் தமிழ்நாட்டைச் சேர்ந்த படைவீரர்கள் குடும்பத்திற்கான கருணைத்தொகை ரூ. 40 லட்சமாக உயர்வு.

* வரும் நிதி ஆண்டிலிருந்து அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் செயல்படுத்தப்படும்”பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ. 40,299 கோடி ஒதுக்கீடு”

* 4ம் வகுப்பு மற்றும் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.110 கோடி செலவில் எண்ணும் எழுத்தும் திட்டம் விரிவுபடுத்தப்படும்”
* இந்து சமய அறநிலையத்துறை, வனத்துறையின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளும், பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கொண்டு வரப்படும்.

* ஆதிதிராவிடர், பழங்குடியின பிரிவு மாணவர்களுக்கு 4 புதிய விடுதிகள் நவீன வசதிகளுடன் கட்டப்படும்; இதன் பராமரிப்பு பணிகள் நிபுணத்துவம் வாய்ந்த நிறுவனங்களிடம் அமைக்கப்படும்.

* மாற்றுத்திறனாளிகளுக்காக மாத ஓய்வூதியம் ₹1500 ஆக அதிகரிப்பு. கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியுதவித் தொகை ₹2000 ஆக அதிகரிப்பு.

* மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து, நடராஜனுக்கு சென்னையில் நினைவிடம் அமைக்கப்படும் 

* சங்கமம் கலை விழா வரும் ஆண்டுகளில் மேலும் 8 நகரங்களில் நடத்தப்படும் 

* 25 இடங்களில் நாட்டுப்புற கலை பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் 

* வயது முதிர்ந்த மேலும் 591 தமிழறிஞர்களுக்கு இலவச பேருந்து பயணச் சலுகை வழங்கப்படும் 

* இலங்கை தமிழர்களுக்கு 3959 வீடுகள் கட்ட 223 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் 
 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.