மகிழ்ச்சி நாடுகள் பின்லாந்து முதலிடம்| Finland tops the list of happiest countries

நியூயார்க் :உலகின் மகிழ்ச்சியான நாடுகளுக்கான தரவரிசைப் பட்டியலில், தொடர்ந்து ஆறாவது ஆண்டாக, ஐரோப்பிய நாடான பின்லாந்து முதலிடத்தில் உள்ளது. உலக மகிழ்ச்சி தினம் ஆண்டுதோறும், மார்ச் 20ல் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி மகிழ்ச்சியாக இருக்கும் நாடுகளின் தரவரிசைப் பட்டியலை, ஐ.நா.,வின் நீடித்த வளர்ச்சி தீர்வுகள் அமைப்பு வெளியிட்டு உள்ளது.

வருமானம், ஆரோக்கியம், சுதந்திரம் மற்றும் ஊழல் இல்லாமை ஆகிய- காரணிகள் அடிப்படையில், 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் இதற்கான ஆய்வு நடத்தப்பட்டது.

இந்தப் பட்டியலில், தொடர்ந்து ஆறாவது ஆண்டாக, ஐரோப்பிய நாடான பின்லாந்து முதலிடத்தில் உள்ளது. ஐரோப்பிய நாடுகளான டென்மார்க், ஐஸ்லாந்து ஆகிய நாடுகள் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளன.
இந்த தரவரிசைப் பட்டியலில், இந்தியா, 125வது இடத்தில் உள்ளது. நம் அண்டை நாடுகளான நேபாளம், சீனா, வங்கதேசம் மற்றும் இலங்கையை விடவும் இந்தியா பின்தங்கி உள்ளது.
தலிபான் ஆட்சி நடக்கும் ஆப்கானிஸ்தான், தரவரிசைப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.