19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

நேற்று முன்தினம் (20) டுபாயில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட முக்கோண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை அணி பங்களாதேஷ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 229 ஓட்டங்களை பெற்றது.

இதனை தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 44 ஓவர்களுக்கு 5 விக்கெட் இழப்புக்கு 234 ஓட்டங்கள் பெற்று இப்போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை அணி சார்பாக சினெத் ஜயவர்தன 101 ஓட்டங்களையும், ஹிருன் கபுரு பண்டார 52 ஓட்டங்களையும் அதிகமாக பெற்றுள்ளனர்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.