Vijay: மருமகன் ஆகாஷ் முரளியை ஹீரோவாக்கும் விஜய் மாமா: அஜித் பட இயக்குநர், கார்த்தி ஹீரோயின்

மறைந்த நடிகர் முரளியின் மூத்த மகனான அதர்வா தந்தை வழியில் நடிக்க வந்துவிட்டார். அவர் படங்களில் நடிப்பதுடன், தயாரிக்கவும் செய்கிறார். நல்ல நடிப்புத் திறமை இருந்தும் இன்னும் முன்னணி நடிகர் என்கிற அந்தஸ்தை பெற முடியாமல் போராடி வருகிறார்.

அதர்வாவுக்கு ஆகாஷ் என்கிற தம்பி இருக்கிறார். தன் தம்பியையும் திரையுலகில் அறிமுகம் செய்து வைக்க விரும்பினார் அதர்வா. அவர் ஆசைப்பட்டது போன்றே ஆகாஷ் முரளி ஹீரோவாகிவிட்டார். ஆனால் ஆகாஷை அறிமுகம் செய்து வைப்பது அதர்வா இல்லை மாமனார் சேவியர் ப்ரிட்டோ.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

ஆம், விஜய்யின் மாமா சேவியர் ப்ரிட்டோ தான். சேவியர் ப்ரிட்டோவின் மகள் சினேகாவுக்கும், ஆகாஷுக்கும் கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26ம் தேதி சென்னையில் திருமணம் நடந்தது.

சத்தமில்லாமல் நடந்த விஜய் மாமா மகள், அதர்வா தம்பியின் திருமணம்

சிங்கப்பூரில் படித்தபோது அவர்களுக்கு இடையே நட்பு ஏற்பட்டு அது காதலாக மாற அதை வீட்டில் தெரிவித்து திருமணம் செய்து கொண்டார்கள். வெவ்வேறு மதம் என்பதால் முதலில் இரண்டு வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. ஆனால் இருவரும் தங்கள் காதலில் உறுதியாக இருந்ததை பார்த்து திருமணம் செய்து வைத்துவிட்டார்கள்.

இந்நிலையில் தான் தன் மருமகனை ஹீரோவாக்கியிருக்கிறார் சேவியர் ப்ரிட்டோ. விஷ்ணுவர்தன் இயக்கவிருக்கும் அந்த படத்தில் ஆகாஷுக்கு ஜோடியாக இயக்குநர் ஷங்கரின் இளைய மகள் அதிதி நடிக்கவிருக்கிறார்.

இது குறித்து சேவியர் ப்ரிட்டோவின் தயாரிப்பு நிறுவனமான எக்ஸ்.பி. ஃபிலிம் கிரியேட்டர்ஸ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து எக்ஸ்.பி. ஃபிலிம் கிரியேட்டர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் இரண்டாவது படம் இது.

பன்முக திறமை வாய்ந்த இயக்குநர் விஷ்ணுவரதனுடன் இணைவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

நடிகர் முரளியின் மகனும், அதர்வா முரளியின் இளைய சகோதரரான ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகி நடிக்கிறார்.

இத்திரைப்படம் சம்பந்தப்பட்ட இதர நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் வெளியிடப்படும்.

எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும், எங்கள் நலன் விரும்பிகளுக்கும் எங்கள் எக்ஸ்.பி. ஃபிலிம் கிரியேட்டர்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். நன்றி- சேவியர் பிரிட்டோ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த ட்வீட்டை பார்த்த விஷ்ணுவர்தன் கூறியிருப்பதாவது,

எக்ஸ்.பி. ஃபிலிம் கிரியேட்டர்ஸுடன் சேர்ந்து படம் பண்ணுவதில் சந்தோஷமாக இருக்கிறது. ஆகாஷ் முரளியை அறிமுகம் செய்து வைப்பதில் மகிழ்ச்சி. பட வேலையை துவங்க காத்துக் கொண்டிருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ஷேர்ஷா. சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானி நடித்த அந்த இந்தி படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. ஷேர்ஷா மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் விஷ்ணுவர்தன்.

இந்நிலையில் அதர்வா முரளியின் படத்தை முடித்துவிட்டு பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹரின் தயாரிப்பு நிறுவனமான தர்மா ப்ரொடக்ஷன்ஸுக்காக படம் பண்ணப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.