Leo: தளபதியோட அந்த ஸ்டைலு.. தீயாய் இருக்கே: 'லியோ' படத்தின் வெறித்தனமான வீடியோ.!

‘லியோ’ படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் தற்போது காஷ்மீர் ஷெட்யூலை படக்குழுவினர் நிறைவு செய்துள்ளனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படமான லியோவின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்க எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் ‘லியோ’ படக்குழுவினர் வெளியிட்டுள்ள ஸ்பெஷல் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் நடிப்பில் கடைசியாக ‘வாரிசு’ படம் வெளியானது. வம்சி பைடிபள்ளி இயக்கிய இந்தப்படம் தமிழ், தெலுங்கு மொழியில் ரிலீஸ் ஆனது. தில் ராஜு தயாரித்திருந்த இந்தப்படத்தில் விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இவர்களுடன் சரத்குமார், பிரபு, ஷாம், ஜெயசுதா, சங்கீதா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

கடந்த பொங்கல் வெளியீடாக ரிலீசான இந்தப்படம் பேமிலி டிராமாவாக வெளியானது. ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்களை குவித்த இந்தப்படம் சீரியல் போல் இருப்பதாக கலாய்க்கப்பட்டது.இதனையடுத்து விஜய் தற்போது நடித்து வரும் ‘லியோ’ படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ‘மாஸ்டர்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது முறையாக விஜய், லோகேஷ் கூட்டணி இந்தப்படத்தில் இணைந்துள்ளது.

கடந்த வருடம் வெளியான ‘விக்ரம்’ படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எக்கசக்க எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ படத்தில் ரோலக்ஸ் என்ற கெஸ்ட் ரோலில் நடித்து மிரட்டியிருந்தார் சூர்யா. கோலிவுட் சினிமாவே வியக்கும் அளவிற்கு வசூலை அள்ளி குவித்தது ‘விக்ரம்’ படம்.

Pasanga Kishore: 4 வயது மூத்த சீரியல் நடிகையை திருமணம் செய்த பசங்க கிஷோர்: குவியும் வாழ்த்துக்கள்.!

இந்நிலையில் ‘லியோ’ படத்தின் காஷ்மீர் சம்பந்தமான காட்சிகள் மொத்தமாக படமாக்கப்பட்டு விட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனை ஸ்பெஷலான வீடியோ ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. அதில் காஷ்மீர் குளிரில் நடந்த படப்பிடிப்பு குறித்து படக்குழு பற்றி பலர் பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

அத்துடன் படப்பிடிப்பு நடந்த சமயத்தில் ஒளிப்பதிவாளரின் தாய் தவறியது, ஒருவர் புதிதாய் பிறந்த குழந்தையை கூட பார்க்க போகாமல் பட வேலைகளை கவனித்து வருவது குறித்தும் பேசப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் இறுதியில் விஜய் ஸ்டைலாக நடந்து வருவதும், இராணுவ வீரர்களுடன் விஜய் பேசுவதும் போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Jayam Ravi: 100 கோடி பட்ஜெட்.. ‘அகிலன்’ பட தோல்விக்கு பிறகு அதிரடி காட்டும் ஜெயம் ரவி.!

செவன் கீரின் ஸ்டுடியோ தயாரிக்கும் ‘லியோ’ படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். மேலும் விஜய்யுடன் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், இயக்குனர்கள் மிஷ்கின், கெளதம் மேனன் மற்றும் அர்ஜுன், ப்ரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் ‘லியோ’ படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.