தற்போது அரச சேவையில் உள்ள பட்டதாரிகளை, ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்காக நாளை (25) நடைபெறவிருந்த போட்டிப் பரீட்சை இடம்பெறமாட்டாது என்று இலங்கை பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டின் தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூலமான ஆசிரியர் வெற்றிடங்களுக்காக அரச சேவையில் உள்ள பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்குள் இணைத்துக்கொள்வதற்கான போட்டிப் பரீட்சை, 2023.03.25 ஆம் திகதி (நாளை) நடைபெறவிருந்தது.
இப்போட்டிப் பரீட்சை, உயர் நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் அன்றைய தினம் இடம்பெற மாட்டாது என்று திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
எதிர்வரும் காலங்களில் கிடைக்கப் பெற இருக்கும் உயர் நீதிமன்ற தீர்மானத்தின் பிரகாரம் இப்பரீட்சை நடாத்தப்படும் திகதியினை பிரசுரிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சீ. அமித் ஜயசுந்தர அறிவித்துள்ளார்.