எம்.பி பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம்.. தமிழக முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்.!

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக முன்னாள் அமைச்சரும், தற்போதைய பாஜக சட்டமன்ற உறுப்பினரான புர்னேஷ் மோடி குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை நேற்று நடைபெற்ற நிலையில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

இதனையடுத்து ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதித்ததை தொடர்ந்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், இந்த கிரிமினல் வழக்கின் அடிப்படையில் ராகுல் காந்தியின் எம் பி பதவி பறிக்கப்பட்டுள்ளது. இது பெரும் பரபரப்பை நாடுமுழுவதும் ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து ராகுல் காந்தி தகுதி நீக்க நடவடிக்கைக்கு நாடு முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு க ஸ்டாலின் அவர்கள் கடும் கட்டிடங்களை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்ததாவது ராகுல் காந்தி மீது நடவடிக்கை என்பது முற்போக்கு ஜனநாயக சக்திகள் மீதான தாக்குதல். அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று சேர்ந்து இதனை எதிர்க்க வேண்டும். பதில் சொல்லாமல் கேள்வி கேட்டவரை அப்புறப்படுத்துவது மத்திய அரசுக்கு சரியானது அல்ல.

இந்த தகுதி நீக்க நடவடிக்கைகள் மூலமாக ஜனநாயகம் என்று சொல்லை உச்சரிக்கும் தகுதியை பாஜக இழந்துவிட்டது. ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்தது ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஜனநாயக உரிமையை பறிப்பதாகும். தகுதி நீக்கம் செய்த பாசிச பாஜக நடவடிக்கைக்கு எனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.