காணாமல் போன சாலையை கண்டுபிடிச்சு தாங்க: இளைஞர்கள் அளித்த புகாரால் பரபரப்பு

புதுக்கோட்டையில் நடிகர் வடிவேலு திரைப்பட நகைச்சுவை பாணியில் காணாமல் போன சாலையை கண்டுபிடித்துத் தரக்கேரி காவல் நிலையத்தில் புகாரளித்த இளைஞர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டத்திற்கு உட்பட்ட கீரமங்கலம் பேரூராட்சி 9-வது வார்டு பகுதியில் கீரமங்கலம் பேரூராட்சி மற்றும் செரியலூர் ஊராட்சிகளை இணைக்கும் கிராம சாலை உள்ளது. இந்த கிராம சாலை மிகச்சரியாக கீரமங்கலம் மற்றும் செரியலூர் இனாம் ஊராட்சிகளின் எல்லையில் செல்கிறது.
image
400 மீ நீளம், 8.5 மீ அகலம் இருக்க வேண்டிய இந்த சாலையை தனிநபர்கள் ஆக்கிரமித்தது போக 5 மீ அகலம் மட்டுமே இருப்பதாகவும், மீதமிருக்கும் 3.5 மீ சாலையை மீட்டுத்தரக் கோரியும், பல நாட்களாக பொதுமக்கள் கோரிக்கை வைத்தும் அரசு நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனையடுத்து, கீரமங்கலம் பேரூராட்சியின் 9-வது வார்டு பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து, குறிப்பிட்ட சாலையைக் காணவில்லை எனவும், உடனடியாக அந்த சாலையை கண்டுபிடித்துத் தருமாறும் புகார் மனு ஒன்றை கீரமங்கலம் காவல் நிலையத்தில் அளித்துள்ளனர்.
image
வடிவேலுவின் கிணற்றைக் காணவில்லை என்ற திரைப்பட நகைச்சுவை பாணியில் சாலையைக் காணவில்லை எனக் கூறி புகாரளித்துள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.