தமிழ் திரையுலகின் பிரபல நட்சத்திர தம்பதி சூர்யா – ஜோதிகா. இவரும் ஸ்டார் நட்சத்திரங்கள் என்றாலும் ஜோதிகா திருமணத்திற்கு பிறகு திரையுலகில் இருந்து முழுவதுமாக விலகியிருந்தார். கடந்த சில ஆண்டுகளாக ஒரு சில படங்களில் மட்டுமே நடித்த அவர், சமூக அக்கறையுள்ள கதாப்பாத்திரங்களில் மட்டுமே தோன்றினார். அதன்பிறகு மீண்டும் வெள்ளித்திரையில் இடைவெளி விட்டுள்ளார். இதுகுறித்து விசாரித்தபோது, ஜோதிகா மீண்டும் பாலிவுட் படங்களில் நடிக்க திட்டமிட்டிருக்கிறாராம். அதற்காக மும்பையில் பிரபலமான பகுதியில் புதிய பிளாட் ஒன்றையும் வாங்கியிருக்கிறார்கள். 70 முதல் 80 கோடி ரூபாய் மதிப்பு இருக்கும் அந்த பிளாட்டில் அனைத்து சொகுசு வசதிகளும் செய்யப்பட்டிருக்கிறதாம்.
ஜோதிகாவுக்கு ஏற்கனவே மும்பையில் ஒரு பிளாட் இருக்கிறது. அதில் தான் எப்போது மும்பை சென்றாலும் குடும்பத்தினருடன் தங்குவார்கள். ஆனால், இப்போது குழந்தைகளின் படிப்பிற்காகவும் அங்கு சென்றிருப்பதால், அவர்கள் பள்ளி சென்றுவருவதற்கு ஏற்ப புதிய வீட்டை சூர்யா ஜோதிகா வாங்கியிருக்கிறார்கள். சூர்யாவின் மகள் தியாவுக்கு 16 வயதும், தேவுக்கு 13 வயதும் ஆகிறது. அவர்கள் இருவரும் மும்பையில் இருக்கும் பிரபலமான பள்ளி ஒன்றில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். குழந்தைகள் இருவரும் படித்து முடிக்கும் வரை மும்பையிலேயே சூர்யாவும் ஜோதிகாவும் செட்டிலாக திட்டமிட்டு இந்த புதிய வீட்டை வாங்கியிருக்கிறார்கள்.
அங்கிருந்தபடியே பாலிவுட் படங்களில் நடிக்கவும் ஜோதிகா திட்டமிட்டிருக்கிறார். அவருக்கு இப்போது சில வாய்ப்புகள் வந்திருக்கிறதாம். அதனை பரிசீலித்துக் கொண்டிருக்கும் ஜோதிகா, விரைவில் தன்னுடைய பாலிவுட் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிட இருக்கிறார். ஜோதிகா கடைசியாக 25 ஆண்டுகளுக்கு முன்பு பாலிவுட் படத்தில் நடித்திருந்தார். அதேபோல் சூர்யாவும் இப்போது சூர்யா 42 படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். குடும்பத்தினர் மும்பையில் இருப்பதால் சென்னைக்கும் மும்பைக்கும் அடிக்கடி விசிட் அடித்துக் கொண்டிருக்கிறாராம். கூட்டுக் குடும்பமாக இருந்த நடிகர் சிவக்குமார் குடும்பத்தில் சூர்யா தனிக்குடித்தனம் சென்றிருப்பது சினிமா வட்டாரத்திலும் கிசுகிசுக்களாக பேச்சு அடிபட தொடங்கியுள்ளது.