தென்னிந்திய திரைப்படங்களில் வரும் காட்சியை போன்று கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த யுவதி ஒருவர் தனது தாயை பாம்பு கடியிலிருந்து மீட்டுள்ளார்.
பாம்பு கடிக்கு உள்ளானவர்கள் பாம்பின் விஷத்தன்மை விஷம் ஏறிய அளவு ஆகிய காரணிகளின் அடிப்படையில் அவர்களுக்கான நோய் குறிகளும் மாறுபடுகின்றது.
வலி, வீக்கம், செந்நிறமாகுதல், அரித்தல், தலைவலி, வாந்தி, வயிற்றோட்டம், தலைசுற்றல், மயக்கம், மூச்சு எடுப்பதில் சிரமம் போன்ற பல்வேறு அறிகுறிகளும் தென்படலாம்.
Pexels
பாம்பு கடி கவனிக்கப்படாவிட்டால் உயிர் ஆபத்து ஏற்படக்கூடிய பாதிப்புகளை உருவாக்கி விடும்.
ரத்தப்போக்கு உடல் உறுப்புகள் செயலிழத்தல் மற்றும் சுவாசப்பை செயலிழத்தல் போன்ற காரணிகள் இதில் உள்ளடங்குகின்றன.
பாம்பு விஷம் பக்கவாதம், கோமாநிலை அல்லது மரணத்தைக் கூட சம்பவிக்கும்.
எனவே பாம்பு கடிக்கு உள்ளானவர்களை உடனடியாக சிகிச்சைக்கு உட்படுத்துவது மிகவும் அவசியமாகின்றது.
குறிப்பாக அவை விஷ பாம்புகளாக இருந்தால் துரித கதியில் முதலுதவி மற்றும் சிகிச்சை வழங்கப்பட வேண்டியுள்ளது.
கர்நாடகாவை கல்லூரி மாணவி ஒருவர் தனது தாயின் உயிரை காப்பாற்றியுள்ளார்.
News 18
சார்மியா ராய் என்ற மாணவியே இவ்வாறு தனது தாயின் காலில் பாம்பு கடித்த போது சற்றும் அஞ்சாமல் பாம்பு விஷத்தை வாயில் உரிஞ்சி எடுத்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தின் தக்ஷின கன்னட மாவட்டத்தின் புத்தூர் பகுதியில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.
மாணவியின் தாய், விவசாய நிலத்தில் காணப்பட்ட நீர் இறைக்கும் இயந்திரத்தை இயக்கச் செய்ய சென்றபோது தவறுதலாக நாகப்பாம்பு ஒன்றை மிதித்து உள்ளார்.
இதன் போது அந்த பாம்பு அவரின் காலில் தீண்டியுள்ளது.
Mangalore Today
பாம்பு தீண்டியதும் உடனடியாக அருகாமையில் இருந்த புல் ஒன்றை எடுத்து பாம்பு தீண்டிய பகுதியை இறுக கட்டி விஷம் உடலின் ஏனைய பாகங்களுக்கு பரவுவதனை தடுத்து நிறுத்தியுள்ளார்.
வைத்தியசாலையில் தாயை அனுமதிப்பதற்கு முன்னதாக பாம்பின் விஷத்தை குறித்த மாணவி உறிஞ்சி எடுத்துள்ளார்.
சர்மாயாவின் இந்த செயல்பாடு காரணமாக அவரது தாயான மம்தாவின் உயிரை காப்பாற்ற முடிந்தது என வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திரைப்படங்களில் போன்று உடன் செயல்பட்டு தனது தாயின் உயிரைக் காப்பாற்றிய சர்மாயாவிற்கு பல் திசைகளில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து உள்ளன.