பொதுத்தேர்தலில் பாஜகவுக்கு எதிராக ’பாரத் ஜோடோ’ வலுக்கும் கூட்டணி கட்சிகளின் ‘கை’

நியூடெல்லி: ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட தகவல் வெளியானதுமே, அவரது தண்டனையை நிறுத்தி வைக்க காங்கிரஸ் தனது சட்டப்போராட்டத்தைத் தொடங்கிவிட்டது. அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களுக்குப் பிறகு, இது குறித்து பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி, இந்த நடவடிக்கை பாஜகவின் அரசியல் பழிவாங்கலைத் தவிர வேறு எதுவுமே இல்லை என்று தெரிவித்தார்.

அதானி விவகாரம் வெளியானதில் இருந்து அந்த குழுமம் மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக ராகுல் காந்தி கேள்வி எழுப்பியதன் எதிரொலியே இந்த பதவி தகுதி நீக்கம் என்று காங்கிரஸ் கட்சி கருதுகிறது.

ராகுல் காந்தியின் வாயை அடைக்கவும், அதானி விவகாரத்தில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவும், ராகுல் காந்தி மீது இதுபோன்ற சதி நடவடிக்கை எடுக்க பாஜக முயற்சித்துள்ளதாக காங்கிரஸ் எம்பி கேசி வேணுகோபால் கடுமையாக விமர்சிக்கிறார்.

இது பாஜக அரசின் ஜனநாயக விரோத, சர்வாதிகாரப் போக்கின் தெளிவான வழக்கு என்று காங்கிரஸ் மட்டுமல்ல, பல கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ராகுலின் பதவி தகுதி நீக்கம் தொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், ராகுல் காந்தியின் சகோதரியுமான பிரியங்கா காந்தி பல கேள்விகளை எழுப்பினார்.

“உங்கள் அடிவருடிகள், ஒரு பிரதமரின் மகனை துரோகி என்று அழைத்தனர், உங்கள் முதல்வர் ஒருவர் ராகுல் காந்தியின் தந்தை யார் என்று கேள்வி எழுப்பினார்.

முழு குடும்பத்தையும், காஷ்மீரி பண்டிட் சமூகத்தையும் அவமதித்த உங்களுக்கு எந்த நீதிபதியும் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கவில்லை. உங்களை நாடாளுமன்றத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்யவில்லை என்று பிரியங்கா காந்தி டிவிட்டரில் தனது சீற்றத்தை வெளிப்படுத்தினார்.

இந்தியாவின் உண்மையான விசுவாசியாய், ராகுல் காந்தி, அதானியின் கொள்ளை குறித்து கேள்வி எழுப்பினார். இதை நீங்கள் முடிக்க முயற்சிக்கிறீர்கள்.

எங்கள் குடும்பம் இந்திய மக்களின் உரிமைக்காக, தலைமுறை தலைமுறையாக போராடியது. எங்கள் நரம்புகளில் ஓடும் ரத்தத்திற்கு ஒரு சிறப்பு உண்டு… உங்களைப் போன்ற கோழை, அதிகார வெறி பிடித்த சர்வாதிகாரியின் முன் பணிந்ததில்லை. உங்களை நேரடியாகவே விமர்சிக்கிறேன், நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் என்று பிரியங்கா காந்தி பிரதமர் மோடிக்கு சவால் விடுத்துள்ளார்.

பிரதமர் மோடியின் புதிய இந்தியாவில், எதிர்க்கட்சித் தலைவர்கள் பாஜகவின் பிரதான இலக்காக மாறியுள்ளனர்! கிரிமினல் பின்னணி கொண்ட பாஜக தலைவர்கள் அமைச்சரவையில் சேர்க்கப்படுவதும், எதிர்க்கட்சித் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரங்களில் பேசுவதை கொண்டே அவர்கள் தகுதியற்றவர்கள். இன்று, நமது அரசியலமைப்பு ஜனநாயகம் ஒரு புதிய வீழ்ச்சியைக் கண்டுள்ளோம் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பாஜகவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு அவரால் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் உருவாகியுள்ள நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சீதாராம் யெச்சூரி காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக டிவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர்களைக் குறிவைத்து அவர்களைத் தகுதி நீக்கம் செய்ய பாஜக இப்போது குற்றவியல் அவதூறு வழியைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளது. இது எதிர்க்கட்சிகளுக்கு எதிராக அரசு இயந்திரங்களை தவறாகப் பயன்படுத்தும் போக்கு என்றும்,இத்தகைய எதேச்சாதிகார தாக்குதல்களை எதிர்த்து தோற்கடிப்பது அவசியம் என்றும் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.