அரிசியில் சிக்கி மூச்சுத்திணறி 2 பேர் பலி

காரைக்குடி: அரிசியில் சிக்கி மூச்சுத்திணறி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே புதுவயலை சேர்ந்தவர் குருசேகர். இவருக்கு சொந்தமான நவீன அரிசி ஆலை சாக்கோட்டை மித்ராவயல் சாலையில் உள்ளது. இங்குள்ள அரிசி சேமிக்கும் கலத்தில் இருந்து அரிசியை சாக்குப்பையில் பிடிக்கும் பணியில் கண்டனூர் திலகர் தெருவை சேர்ந்த வரதராஜன் மகன் முத்துக்குமார் (45), பீகார் மாநிலத்தை சேர்ந்த குந்தன்குமார் (30) ஆகியோர் நேற்று ஈடுபட்டிருந்தனர்.

அப்போது திடீர் என அரிசி சேமிக்கும் கலனில் உள்ள பின் எதிர்பாராதவிதமாக உடைந்தது. இதில் கலனில் சேமித்து வைக்கப்பட்டிருந்த அரிசி இருவர் மீதும் கொட்டியுள்ளது. இதில் அரிசியில் மூழ்கி மூச்சுத் திணறி முத்துக்குமார், குந்தன்குமார் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். சம்பவ இடத்தை ஏஎஸ்பி ஸ்டாலின் பார்வையிட்டு அங்கு பணியில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினார். விபத்து தொடர்பாக சாக்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.