ராகுல் காந்தி குறி வைக்கப்பட்டது எதனால்? பின்னால் இருப்பது யார்? மோடியின் கண்களில் பயம்!

ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

“லண்டன் பேச்சு குறித்து நான் மன்னிப்பு கேட்க பாஜகவினர் கோரினர். இந்தியாவிற்கு எதிராக நான் பேசியதாக மத்திய அமைச்சர் கூறும் எனது லண்டன் பேச்சுக்களை யார் வேண்டுமானாலும் ஆய்வு செய்யலாம். லண்டன் பேச்சு குறித்து பேச அனுமதி கேட்டதற்கு மக்களவை சபாநாயகர் மறுத்துவிட்டார்.

அதானாயின் போலி நிறுவனங்களுக்கு 20,000 கோடி ரூபாய் யாருடைய பணம். அது எங்கிருந்து வந்தது? அதானியின் போலி நிறுவனங்களுக்குச் சென்ற முதலீடுகள் குறித்து நான் கேள்வி எழுப்ப கூடாது என்பதற்காகவே இத்தனை நாடகங்களும் அரங்கேறியுள்ளன.

குஜராத் முதலமைச்சராக மோடி இருந்த காலகட்டத்திலேயே அதானியுடன் நட்பு பாராட்டி வருகிறார். மோடிக்கும் அதானிக்கும் என்ன தொடர்பு என கேள்வி எழுப்பியிருந்தேன் இன்று வரை அதற்கு பதில் இல்லை.

பிரதமருடன் அதானி ஒரே விமானத்தில் பயணித்த புகைப்படங்களை வெளியிட்ட பிறகே என் மீதான தாக்குதல்கள் தொடங்கின. அதானி குறித்து எனது அடுத்த பேச்சை கேட்க மோடி பயப்படுகிறார். பயத்தை அவரது கண்ணில் நான் பார்த்தேன்.

எந்த நடவடிக்கையை கண்டும் அஞ்சப்போவதில்லை. பதவி பறிப்பு, கைது நடவடிக்கை உள்ளிட்ட எதற்காகவும் நான் ஒரு போதும் அஞ்ச மாட்டேன். நீதிமன்ற தீர்ப்பு உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளை நான் மதிக்கிறேன். அதை ஏற்றுக் கொள்கிறேன்.

உண்மையை சொல்வது தவிர வேறு எதிலும் எனக்கு விருப்பம் இல்லை. கைது செய்யப்பட்டாலும் உண்மையை தொடர்ந்து பேசுவேன்” என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.