Ajith: 'வாலி படத்தின் கதை சொன்னபோது'… அஜித் அப்பா குறித்து எஸ் ஜே சூர்யா உருக்கம்!

நடிகர் அஜித்தின் அப்பா பி சுப்பிரமணியம் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று அதிகாலை 3.15 மணிக்கு காலமானார். பி சுப்பிரமணியம் பக்கவாதத்தால் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். தொடர்ந்து மருத்துவ சிகிச்சையில் இருந்த பி சுப்பிரமணியம் நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார்.

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
என் அம்மா 47 வயசுல பிள்ளை பெத்ததுக்கு நான் எதுக்கு வெட்கப்படணும்? பிரபல நடிகை கேள்வி!

அவரது மறைவுக்கு தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். இதேபோல் முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்தனர். மேலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் நேரில் சென்று நடிகர் அஜித் குமாரின் தந்தை சுப்பிரமணியத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

மேலும் பிரபலங்கள் பலரும் அஜித் குமாரின் வீட்டிற்கு நேரில் சென்று அவருக்கு ஆறுதல் கூறினர்.

இதனை சுப்பிரமணியத்தின் உடல் பெசன்ட் நகரில் உள்ள மின்மயானத்தில் நேற்று மாலை தகனம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு நடிகர் அஜித்குமாரின் தம்பி அனில் குமார் இறுதிச் சடங்குகளை செய்ததாக கூறப்படுகிறது.

Ajith: நன்றியே இல்லாத ஆள் அஜித்… பிரபல நடிகர் ஆவேசம்!

நடிகர் விஜய் பெசன்ட் நகர் மின்மயானத்திற்கு சென்று நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியத்திற்கு அஞ்சலி செலுத்த திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதற்குள் இறுதி சடங்குகள் முடிந்து விட்டதால் ஈ.சி.ஆர் சாலையில் உள்ள நடிகர் அஜித்தின் இல்லத்திற்கு நடிகர் விஜய் நேரில் சென்று அஜித் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

Aishwarya Rajinikanth: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் திருடிய நகைகளை வைத்து ரூ. 1 கோடிக்கு சொகுசு வீடு.. விசாரணையில் அதிர்ச்சி!

இந்நிலையில் இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் நடிகர் அஜித்திற்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். அவரது பதிவில், ஆழ்ந்த இரங்கல் ஐயா. வாலி படத்தின் கதையை அஜித் சாருக்கு கூறியபோது ஐயாவும் அவருடன் அமர்ந்து கதை கேட்டு மகிழ்ந்ததை இன்னும் நினைவு கூர்கிறேன். எப்பொழுதும் உங்களை நேசிக்கிறேன் ஐயா. அம்மா, அஜித் சார், ஷாலினி மேம் மற்றும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.