இந்திய பத்திரிக்கையாளரை தூதரகத்திற்கு வெளியே வைத்து தாக்கிய காலிஸ்தான் ஆதரவாளர்கள்!


அமெரிக்காவை சேர்ந்த இந்திய பத்திரிக்கையாளர் லலித் ஜாவை( Lalit Jha) இந்திய தூதரகத்திற்கு வெளியே வைத்து காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்கியுள்ளனர்.

காலிஸ்தான் ஆதரவாளர்கள்

அமெரிக்காவின் வாஷிங்டனிலுள்ள இந்திய தூதரகத்தின் முன்பு கடந்த மார்ச் 18ஆம் திகதி காலிஸ்தான் ஆதரவாளர்கள் வாஷிங்டனை சேர்ந்த இந்திய பத்திரிக்கையாளரை மோசமான வார்த்தைகளால் திட்டியும், உடல் ரீதியாக தாக்கியும் இருக்கிறார்கள்.

இந்திய பத்திரிக்கையாளரை தூதரகத்திற்கு வெளியே வைத்து தாக்கிய காலிஸ்தான் ஆதரவாளர்கள்! | Indian Journalist Attack By Khalistani Supporters@ani

இந்த சம்பவத்திற்கு எதிராக இந்திய தூதரகம் கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் 19ஆம் திகதி இந்திய பத்திரிக்கையாளர் லலித் ஜா தன்னை பாதுகாத்ததற்காகவும், தனது வேலையைச் செய்ய உதவியதற்காகவும் அமெரிக்க ரகசிய சேவைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

காலிஸ்தான் ஆதரவாளர்கள் லலித் ஜாவின் இடது பக்க காதில் தடியால் தாக்கியதாக கூறியுள்ளார். மேலும் காலிஸ்தான் ஆதரவாளர்களின் காணொளியையும்  ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்திய காவல்துறைக்கு எதிர்ப்பு

”நன்றி @SecretService தங்களது பாதுகாப்பு எனது வேலையைச் செய்ய உதவியது, இல்லையெனில் நான் இதை மருத்துவமனையிலிருந்து எழுதிக் கொண்டிருப்பேன். கீழே உள்ள மனிதர் அவரது கையிலிருந்த தடியால் என் இடது காதில் அடித்தார். என வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

“அமிர்தபால் சிங்கிற்கு ஆதரவாக காலிஸ்தான் ஆதரவு போராட்டக்காரர்கள் காலிஸ்தான் கொடிகளை அசைத்து, அமெரிக்க ரகசிய சேவையின் முன்னிலையில் தூதரகத்தின் மீது இறங்கினர்.

அவர்கள் தூதரகத்தைச் சேதப்படுத்துவதாகவும், இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்துவை மிரட்டினர்,” என லலித் ஜா ஊடகத்தில் தெரிவித்துள்ளார்.

இந்திய பத்திரிக்கையாளரை தூதரகத்திற்கு வெளியே வைத்து தாக்கிய காலிஸ்தான் ஆதரவாளர்கள்! | Indian Journalist Attack By Khalistani Supporters@twitter

போராட்டக்காரர்களில் காலிஸ்தான் ஆதரவு கோஷங்களை எழுப்பிய அனைத்து வயது ஆண்களும் தலைப்பாகை அணிந்திருந்தனர். அவர்கள் DC-Maryland-Verginia (DM பகுதியின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருக்கிறார்கள்.

அமைப்பாளர்கள் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தி ஆங்கிலத்திலும் பஞ்சாபியிலும் இந்தியாவின் மனித உரிமை மீறல்களுக்காக பஞ்சாப் காவல்துறையைக் குறிவைத்து திட்டியுள்ளனர்.

இந்திய தூதரகம் கண்டனம்

இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு மூத்த பத்திரிகையாளர் மீதான இத்தகைய கடுமையான மற்றும் தேவையற்ற தாக்குதலை நாங்கள் கண்டிக்கிறோம்.

இந்திய பத்திரிக்கையாளரை தூதரகத்திற்கு வெளியே வைத்து தாக்கிய காலிஸ்தான் ஆதரவாளர்கள்! | Indian Journalist Attack By Khalistani Supporters@twitter

இதுபோன்ற நடவடிக்கைகள் ‘காலிஸ்தானி போராட்டக்காரர்கள்’ என்று அழைக்கப்படுபவர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களின் வன்முறையும், சமூக விரோத போக்குகளை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. விரும்பத்தகாத வன்முறை மற்றும் நாசவேலைகளில் வழக்கமாக ஈடுபடுபவர்.” என கூறியுள்ளனர்.

இந்த விவகாரத்தில் உடனடி பதில் அளித்ததற்காக சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கும் இந்திய தூதரகம் நன்றி தெரிவித்துள்ளது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.