எனக்கு பாய் பிரண்டாக வர வேண்டுமென்றால்… மிர்னாளினி ரவி கொடுத்த விளக்கம்!

சேலம் அம்மாபேட்டை பகுதியில் உள்ள தனியார் கலைக் கல்லூரியில் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் தமிழ் திரையுலகின் பிரபல நடிகை மிர்னாளினி ரவி கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.  நடிகை மிர்னாளினி ரவி அவர்களிடம் ரசிகர்கள் கேள்வி கேட்டனர், அப்பொழுது அவர்
நடிகர் விஜய், அஜித் இருவருமே பிடிக்கும், நடிகர் விஜய் அவர்களின் நடனம் பிடிக்கும், நடிகர் அஜித் அவர்களின் ஸ்டைல் பிடிக்கும் என்றார்.

வாழ்க்கையில் எப்பொழுதுமே சந்தோஷமாக இருக்க வேண்டு வேண்டும். எனக்கு பிடித்த உணவு பிரியாணி என்றார், எனக்கு பாய் பிரண்டாக இருக்க வேண்டும் என்றால் இந்த தகுதி இருந்தால் போதும் மனம் திறந்து கூறிய நடிகை என்னை எப்பொழுதும் சிரிக்க வைக்க வேண்டும். சந்தோசமாக பார்த்துக் கொண்டால் போதும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் அவர் நடித்த எனிமி திரைப்பட டும் டும் பாடலுக்கு கல்லூரி மாணவிகளுடன் குதூகலமாய் குத்தாட்டம் போட்டு நடனம் ஆடினார். நடிகையின் நடனத்தை கண்ட மாணவர்கள் விசில் பறக்க ஆரவாரம் செய்தனர். தொடர்ந்து செல்பி எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் கத்தியதால் பெரும் பரபரப்பு நிலவியது, இதனை எடுத்து அந்த பகுதியில் இருந்து அவசர அவசரமாக நடிகை புறப்பட்டு சென்றார்.  மிர்னாளினி ரவி தமிழில் எனிமி, எம்ஜிஆர் மகன், கோப்ரா போன்ற படங்களில் நடித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.