ஏப்ரல் 1 முதல் அமல் கீழடி அருங்காட்சியகத்தில் பார்வையாளர் கட்டணம் நிர்ணயம்

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடி அருங்காட்சியகம். தமிழரின் தொன்மையை உலகுக்கு வெளிப்படுத்தும் இந்த அருங்காட்சியகத்தை காண வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த அருங்காட்சியத்தை பார்வையிட வருகை தரும் பொது மக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட உள்ளது.

இந்த கட்டணம் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி உள்நாட்டினர் பிரிவில் பெரியவர்களுக்கு – ரூ.15, சிறியவர்களுக்கு- ரூ.10, மாணவர்களுக்கு ரூ.5 என்றும், வெளிநாட்டினர் பிரிவில் பெரியவர்களுக்கு ரூ.50, சிறியவர்களுக்கு ரூ.25 என பார்வையாளர் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் நிழற்படம் எடுக்க – ரூ.30, வீடியோ எடுக்க – ரூ.100 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.