டூத் பிரஷ் பயன்படுத்தி சிறையில் இருந்து தப்பித்த கைதிகள்! பான் கேக் சாப்பிடும் போது சுற்றிவளைத்த பொலிஸார்


அமெரிக்காவில் டூத் பிரஷ் உதவி கொண்டு சிறையில் இருந்து தப்பித்த இரண்டு கைதிகள், பிரபல ஹோட்டலில் பான் கேக் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது கையும் களவுமாக பொலிஸாரிடம் சிக்கினர்.

சிறையில் இருந்து தப்பித்த கைதிகள்

அமெரிக்காவின் விர்ஜினியா-வில் உள்ள சிறைச்சாலையில், ஜான் கார்ஸா(37) மற்றும் ஆர்லே நீமோ (43) என்ற இரண்டு கைதிகள் பல் துலக்கும் டூத் பிரஷ் மற்றும் மெட்டல் உலோகம் ஒன்றின் உதவியை கொண்டு சிறையின் சுவரை துளையிட்டு தப்பித்துள்ளனர்.

கடந்த மார்ச் 20ம் திகதி கைதிகளின் எண்ணிக்கையை காவலர்கள் சரிபார்க்கும் போது தான், இரண்டு கைதிகள் சிறையில் இருந்து தப்பித்து இருப்பதை காவலர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

டூத் பிரஷ் பயன்படுத்தி சிறையில் இருந்து தப்பித்த கைதிகள்! பான் கேக் சாப்பிடும் போது சுற்றிவளைத்த பொலிஸார் | 2 Us Inmates Escape Prison Using ToothbrushTwitter

தப்பித்த சிறைக் கைதி ஜான் கார்சா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கும், மற்றொரு சிறைக் கைதி ஆர்லே நீமோ மீது கிரெடிட் கார்டு மோசடி, விதிமீறல், திருட்டு போன்ற வழக்குகளும் நிலுவையில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


பான் கேக் கடையில் சிக்கிய கைதிகள்

இந்நிலையில் சிறையில் இருந்த தப்பித்த இரண்டு கைதிகளும் 7 மைல் தொலைக்கு அப்பால் இருந்த பிரபல சொகுசு பான் கேக் ஹோட்டலில் நின்று கேக் சாப்பிட்டிருக்கிறார்கள்.

டூத் பிரஷ் பயன்படுத்தி சிறையில் இருந்து தப்பித்த கைதிகள்! பான் கேக் சாப்பிடும் போது சுற்றிவளைத்த பொலிஸார் | 2 Us Inmates Escape Prison Using Toothbrush

அப்போது ஹோட்டலின் ஊழியர் ஒருவர் நிலைமையை புரிந்து கொண்டு உடனடியாக ஹாம்ப்டன் பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளார்.

இதையடுத்து பான் கேக் ஹோட்டலுக்கு விரைந்து வந்த பொலிஸார், சிறையில் இருந்து தப்பித்த இருவரையும் கேக் சாப்பிட்டு கொண்டிருந்த போதே கைது செய்து அழைத்து சென்றனர். 

டூத் பிரஷ் பயன்படுத்தி சிறையில் இருந்து தப்பித்த கைதிகள்! பான் கேக் சாப்பிடும் போது சுற்றிவளைத்த பொலிஸார் | 2 Us Inmates Escape Prison Using ToothbrushUnsplashSource link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.