திருவள்ளூரை உலுக்கிய 175 சவரன் நகை கொள்ளை வழக்கு! வங்கி ஊழியர் உட்பட 5 பேர் கைது!

சென்னை:  நகை கடைகளுக்கு விற்பனைக்கு ஊழியர்கள் கொண்டு சென்ற 175 சவரன் தங்க நகைகளயும் பணத்தை கொள்ளையடித்த வங்கி ஊழியர் உட்பட 5 பேர் கொண்ட கும்பலை திருவள்ளூர் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் இரண்டு ஆண்டுகளாக கொள்ளையடிக்க திட்டமிட்டது தெரியவந்தது.

ராமேஷ்வர் லால் நெற்குன்றத்தில் நகைகள் தயாரிக்கும் தொழிலை  செய்து வருபவர் என்றும், திருவள்ளூர் மற்றும் பிற இடங்களில் உள்ள பல நகைக்கடைகளுக்கு நகைகளை விற்பனை செய்து வருவதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. நகைக்கடைகளுக்கு ஊழியர்கள் மூலம் நகைகள் சப்ளை செய்யப்பட்டன. கடந்த மார்ச் 20ம் தேதி கல்லூரும், சோஹனும் நாசரத்பேட்டை, பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளுக்கு இரு சக்கர வாகனத்தில் நகைகளை கொண்டு சென்றனர்.

“இரண்டு கடைகளில் டெலிவரி செய்துவிட்டு தாமரைப்பாக்கத்தில் இருந்து ரெட்ஹில்ஸுக்குச் சென்றனர். மதியம் 1.30 மணியளவில் காரைப்பேட்டை கிராம சந்திப்பில் இரு பைக்கில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் வழிமறித்து ரூ.80 லட்சம் மதிப்புள்ள 174 சவரன் தங்க நகைகள், ரூ.1.05 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்” என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வடக்கு ஐஜி என் கண்ணன் உத்தரவின் பேரில், சந்தேக நபர்களை கண்டுபிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தடயங்கள் மற்றும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், திருநின்றவூர் அருகே உள்ள பழவேடு கிராமத்தில் மர்ம நபர்களை கண்டுபிடித்தனர்.
அண்ணா நகரில் உள்ள வங்கியில் உதவி மேலாளராகப் பணியாற்றி வந்த கமல் கிஷோர், 31, அவரது கூட்டாளிகள் தமிழ்மணி, 28, பாலாஜி, 29, சுகுமார், 26, கிளாடிஸ், 30, ஆகிய 5 பேரை போலீஸார் கைது செய்து, 820 கிராம் தங்க நகைகளை மீட்டனர். அவர்களிடம் இருந்து கார், இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு கத்தி. கிஷோர் மற்றும் அவரது கும்பல் கபடி விளையாடும் போது ஒருவரையொருவர் அறிந்ததாக போலீசார் தெரிவித்தனர். கொள்ளைக்கும்பலுக்கு திட்டம் போட்டுக் கொடுத்த பாக்கம் நகைக்கடை உரிமையாளரின் மகன் கமல் கிஷோர் என்பவர் இந்த கொள்ளைக்கு மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. 

“கிஷோரின் தந்தை ராமேஷ்வர் லாலிடம் நகைகளை வாங்கினார். வரி செலுத்துவதைத் தவிர்ப்பதற்காக நகைக் கடைகளுக்கு லால் பில் கொடுக்கவில்லை என்பதை கிஷோர் அறிந்தார். வருமான வரித்துறைக்கு பயந்து நகை செய்யும் தொழில் நிறுவன உரிமையாளர் போலீசில் புகார் செய்ய மாட்டார் என நினைத்து கொள்ளையடித்துள்ளனர்,” என மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.