தேர்தல் ஆணைக்குழு பிரதமருக்கு எழுதியுள்ள எழுத்து மூல கோரிக்கை


 தேசிய தேர்தல் ஆணைக்குழு, பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் எழுத்து மூல கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்துவது குறித்து இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கை

தேர்தல் ஆணைக்குழு பிரதமருக்கு எழுதியுள்ள எழுத்து மூல கோரிக்கை | Dinesh Gunawardena Local Governmet Election

இந்த தேர்தல் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த நேரத்தை ஒதுக்கித் தருமாறு தேர்தல் ஆணைக்குழு, பிரதமரிடம் கோரியுள்ளது.

எழுத்து மூலம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமால் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுத் தாக்கல் செய்த அரசாங்க ஊழியர்களுக்கான சம்பளங்கள் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை குறித்தும் இந்த சந்திப்பில் விசேட கவனம் செலுத்தப்பட உள்ளது. Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.