பிரபல நடிகர் புற்றுநோயால் மரணம்! அதிர்ச்சியில் திரையுலகம்


புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரபல மலையாள நடிகர் இன்னொசென்ட் தனது 75வது வயதில் காலமானார்.

மூத்த நடிகர்

மலையாள திரையுலகில் கிட்டத்தட்ட 500 படங்களில் நடித்தவர் இன்னொசென்ட். கதாசிரியர், தயாரிப்பாளர் மற்றும் பின்னணி பாடகராகவும் பணிபுரிந்துள்ளார்.

தமிழில் லேசா லேசா உட்பட இரண்டு படங்களில் நடித்துள்ளார். மேலும், பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார்.

இன்னொசென்ட்/Innocent

கடந்த 2012ஆம் ஆண்டு இன்னொசென்ட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நிலையில் இம்மாதம் 3ஆம் திகதி அவர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது உடல்நிலை மோசமடைந்ததால் அவர் எக்ஸ்ட்ராகார்போரியல் சவ்வு ஆக்சிஜனேற்ற ஆதரவின் கீழ் வைக்கப்பட்டார்.

75 வயதில் மரணம்

மூன்று வாரங்கள் மருத்துவமனையில் இருந்த அவர் இன்று கொச்சி மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 75. 

இன்னொசென்ட்/Innocent

இன்னொசென்ட்/Innocent

இன்னொசென்ட்டின் மறைவு மலையாள திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.    

பிரபல நடிகர் புற்றுநோயால் மரணம்! அதிர்ச்சியில் திரையுலகம் | Actor Innocent Passed Away Age Of 75



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.