உயிரை காப்பாற்றிய மனிதன்: நன்றி தெரிவிக்க வீட்டிற்கே வந்த மான் கூட்டம்: வைரல் வீடியோ


உயிரைக் காப்பாற்றிய மனிதனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மான் கூட்டம் ஒன்று வீட்டு வாசலுக்கே வந்து நிற்கும் வீடியோ சமூக ஊடகத்தில் வைரல் ஆகி வருகிறது.


வேலியில் சிக்கிய மான்

சமீபத்தில் இணையத்தில் வெளியான வீடியோவில், முதலில் மான் ஒன்று வேலி தாண்டிய போது கம்பியில் சிக்கிக் கொண்டு இருப்பதை பார்க்க முடிகிறது.

அப்போது அந்த வழியில் நின்ற மனிதர் ஒருவர், கம்பி வேலியில் சிக்கிய மானை அதிலிருந்து விடுத்தார்.

ஆனால் நீண்ட நேரமாக கம்பியில் சிக்கிக் கொண்டு இருந்ததால் மான் களைத்துப்போய், மீட்கப்பட்ட பின்பும் தரையில் சிறிது நேரம் ஓய்வெடுத்தது போல் தெரிகிறது.

இந்த சம்பவங்களை அந்த நபர் தனது மொபைல் கேமராவில் பதிவு செய்துள்ளார்.

நன்றி சொல்ல வந்த மான் கூட்டம்

அதே வீடியோவில் காட்சிகள் வேறொரு நாளாக தெரியும் நிலையில், மான் ஒன்று உயிரை காப்பாற்றிய மனிதனின் வீட்டிற்கு வெளியே நிற்பதை பார்க்க முடிகிறது.

வீடியோவின் அடுத்த காட்சியில் மான் கூட்டம் ஒன்று அந்த மனிதரின் கேரேஜுக்குள் நுழைவது இடம்பெற்றுள்ளது.

உயிரை காப்பாற்றிய மனிதன்: நன்றி தெரிவிக்க வீட்டிற்கே வந்த மான் கூட்டம்: வைரல் வீடியோ | Saved Deer Comes Back With Herd To Thank ManTwitter/Belgesel Zamanı (Screengrab)

Belgesel Zamanı ட்விட்டரில் பகிர்ந்த வீடியோவில், மான் தனது கூட்டத்துடன் மீட்டதற்கு நன்றி தெரிவிக்க மனிதனிடம் வந்துள்ளது என்று கருத்து பதிவிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோ ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.

இருப்பினும் கம்பி வேலியில் இருந்து மீட்கப்பட்ட மானின் கொம்புகள் வீடியோவில் பின்னர் காணப்பட்ட மானை விட மிகவும் சிறியதாக இருப்பதால் நெட்டிசன்கள் கருத்து வேறுபாடுகளை தெரிவித்து வருகின்றனர். Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.