பள்ளிகள், சாலைகள் சீரமைப்பு… 12 துறைகளுக்கு ரூ.3,500 கோடி: சென்னை மாநகராட்சி பட்ஜெட் 2023 அம்சங்கள்

சென்னை: சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் 12 துறைகளுக்கு ரூ.3500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் 2023 – 2024-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மேயர் பிரியா ராஜன் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து வரி விதிப்பு மற்றும் நிதி நிலைக்குழு தலைவர் சர்ப ஜெயதாஸ் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இதில் 12 துறைகளுக்கு ரூ.3500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்

* மாநகராட்சி பள்ளிக் கட்டடங்களை சீரமைப்பதற்கு மற்றும் புதிதாக மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 139 பள்ளிகளை சீரமைப்பதற்கு ரூ.45 கோடி.

* மாநகராட்சி பள்ளிகளில் படித்து தேசிய கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களின் முதலாம் ஆண்டு கல்விக் கட்டணத்தை மாநகராட்சி ஏற்கும்.

* மக்களுக்கு ஏற்படும் நோய் நிலையை மதிப்பிடுவதற்காக தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் கண்காணிப்புப் பிரிவு.

* மாநகரை துாய்மையாக பராமரிக்க, வார்டுகளுக்கு தரவரிசை கட்டமைப்பை உருவாக்கி, சிறந்த மூன்று வார்டுகளுக்கு ஆண்டுதோறும் வெகுமதி.

* சாலையோரங்களில் உள்ள கட்டட கழிவுகளை அகற்ற, 1.20 கோடி ரூபாய் மதிப்பில் மண்டலத்திற்கு ஒரு வாகனம்.

* சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், 452 பேருந்து வழித்தட சாலைகள் மற்றும் உட்புற சாலைகள் 78.01 கி.மீ., நீளத்திற்கு 55.61 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைப்பு.

* தமிழ்நாடு நகர்புறசாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் 149.55 கோடி ரூபாய் மதிப்பில் 251.11 கீ.மீ., நீளத்திற்கு 1,335 பேருந்து மற்றும் உட்புற சாலைகள் மேம்பாடு.

* உலக வங்கி நிதியுதவி வாயிலாக 1,000 கோடி ரூபாய் மதிப்பில் கொசஸ்தலை ஆறு வடிநிலை ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கப்படும்.

* சென்னை மாநகராட்சி முக்கிய பகுதிகளில் 232 கோடி ரூபாய் மதிப்பில் மழைநீர் வடிகால் பணிகள்.

* மாநகராட்சியின் மழைநீர் வடிகால்கள் 55 கோடி ரூபாய் மதிப்பில் துார்வாரும் பணி.

* தமிழ்நாடு நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் இரண்டு பண்ணை அமைக்கப்படுவதுடன், 2.50 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும்.

* 25 விளையாட்டு திடல்கள் 5 கோடி ரூபாய் மதிப்பில் பராமரிப்புப் பணிகள் மேற்கெள்ளப்படும்

* அண்ணாநகர் வேலங்காடு மயான பூமியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் உயிரிழந்தோர் உடல்களை பாதுகாக்கும் அறை அமைக்கப்படும்.

* மாநகராட்சி தலைமையிடத்தில் உள்ள அலுவலர்கள், பணியாளர்களின் குழந்தைகளைப் பராமரிக்கும் வகையில் பகல்நேர காப்பகங்கள், தரமான உணவகம் தலா 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், உடற்பயிற்சி கூடத்திற்கு 31 லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்படும்.

* மெரினா கடற்கரை, அண்ணாநகர் டவர் பூங்கா, கூவம் ஆற்றுப்படுகை, அடையாறு ஆற்றுப்படுகை உள்ளிட்ட இடங்களில் 2.20 கோடி ரூபாய் மதிப்பில் ‘சிசிடிவி’ கேமராக்கள் அமைக்கப்படும்.

* அண்ணா சாலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், 6.26 கோடி ரூபாய் மதிப்பில் மாதிரி பள்ளி கட்டடம் கட்டும் பணி நடைபெற உள்ளது.

துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!
 • பேருந்து சாலைகள் – ரூ.881.20 கோடி
 • மழைநீர் வடிகால் – ரூ.1,482.70 கோடி
 • திடக்கழிவு மேலாண்மை – ரூ.260.52 கோடி
 • பாலங்கள் – ரூ.102.50 கோடி
 • கட்டடம் – ரூ.104.17 கோடி
 • மின்சாரம் – ரூ.50 கோடி
 • இயந்திரப் பொறியியல் – ரூ.71.29 கோடி
 • கல்வி – ரூ.55 கோடி
 • சுகாதாரம் – ரூ.29.50 கோடி
 • குடும்ப நலன் – ரூ.70 லட்சம்
 • சிறப்புத் திட்டங்கள் – ரூ.313.45 கோடி
 • பூங்கா மற்றும் விளையாட்டுத் திடல் – ரூ.77 கோடி
 • மண்டலங்கள் – ரூ.191.64 கோடி
 • வார்டு மேம்பாட்டுத் திட்டம் – ரூ.80 கோடி
 • மேயர் சிறப்பு மேம்பாட்டுத் திட்டம் – ரூ.2 கோடி

சென்னை மாநகராட்சி பட்ஜெட் தொடர்பான செய்திகள்:

> குறைகளைத் தீர்க்க ‘மக்களைத் தேடி மேயர்’ திட்டம்: சென்னை மாநகராட்சி பட்ஜெட் 2023-ல் அறிவிப்பு

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.