போபாலில் முப்படைத் தளபதிகள், ராணுவ உயர் அதிகாரிகள் உள்ளிட்டோருடன் 6 மணி நேரம் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி!

பிரதமர் மோடி வரும் 30ம் தேதி போபாலில் முப்படைத் தளபதிகள், ராணுவ உயர் அதிகாரிகள் உள்ளிட்டோருடன் சுமார் 6 மணி நேரம், நாட்டின் முன் உள்ள பாதுகாப்பு சவால்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார். முப்படைகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்தும் அவர் அதிகாரிகளிடம் கேட்டறிவார்.

அனைத்து கமாண்டர்களின் ஒருங்கிணைந்த கூட்டம் மார்ச் 30 முதல் ஏப்ரல் 1 ஆம் தேதி வரை போபாலில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் முப்படைகளின் தலைவர் அனில் சவுகானும் பங்கேற்க உள்ளார்.

இதற்கிடையே பாதுகாப்புத் துறையினரின் புதிய கண்டுபிடிப்புகள், ஆயுதங்கள், தொழில்நுட்பங்கள் முதலியவை காட்சிக்கு வைக்கப்படுவதையும் பிரதமர் பார்வையிட இருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.