முடிசூட்டுவிழாவின்போது வில்லியமுக்கும் ஹரிக்கும் இடையில் பிரச்சினை வராமல் தடுக்க அரண்மனையின் திட்டம்


பிரித்தானிய மன்னர் சார்லசுடைய முடிசூட்டு விழா நெருங்க நெருங்க, இளவரசர்கள் ஹரிக்கும் வில்லியமுக்கும் இடையில் ஏதாவது பிரச்சினை உருவாகிவிடக்கூடாது என்பதில் அரண்மனை வட்டாரம் கவனம் செலுத்தத் துவங்கியுள்ளது.

முக்கிய பொறுப்பு வகிக்க இருக்கும் இளவரசர் வில்லியம்

 மன்னரின் முடிசூட்டு விழாவில் இளவரசர் வில்லியமுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட உள்ளது. ஆனால், ஹரிக்கும் அவரது மனைவிக்கும் பெரிய அளவில் பங்கு எதுவும் கொடுப்பதாக திட்டம் இல்லை.

முடிசூட்டுவிழாவின்போது வில்லியமுக்கும் ஹரிக்கும் இடையில் பிரச்சினை வராமல் தடுக்க அரண்மனையின் திட்டம் | King Charles Coronation Keep William

Image: In Pictures via Getty Images

ஆகவே, அதனால் ஹரி மேகன் தம்பதியர் ஏதாவது பிரச்சினைகளை உருவாக்கிவிடக்கூடாது என்பதில் அரண்மனை வட்டாரம் கவனம் செலுத்திவருகிறது. 

ராஜ குடும்ப நிபுணர் தெரிவித்துள்ள தகவல்

பிரித்தானியாவைப் பொருத்தவரை, மன்னருடைய முடிசூட்டு விழா என்பது பிரித்தானியர்களின் மதம் சார்ந்த ஒரு முக்கிய விடயமுமாகும். ஆகவே, அந்த முக்கியமான நாளில் இளவரசர்கள் வில்லியம் ஹரிக்கு இடையில் பிரச்சினை எதுவும் வராத வகையில் நிகழ்ச்சி திட்டமிடப்படும் என்கிறார் ராஜ குடும்ப நிபுணரான Richard Fitzwilliams.

முடிசூட்டுவிழாவின்போது வில்லியமுக்கும் ஹரிக்கும் இடையில் பிரச்சினை வராமல் தடுக்க அரண்மனையின் திட்டம் | King Charles Coronation Keep William

Image: POOL/AFP via Getty Images

அதாவது, கூடுமானவரை, இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹரியை தனித்தனியே வைக்க திட்டமிடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இன்னொரு முக்கிய விடயம், மன்னர் தன் முடிசூட்டு விழாவுக்கு வருமாறு ஹரிக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், ஹரியும் மேகனும் மன்னருடைய முடிசூட்டு விழாவில் கலந்துகொள்வது குறித்து என்ன முடிவெடுத்துள்ளார்கள் என்பதை இதுவரை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

வீடியோவை காண

முடிசூட்டுவிழாவின்போது வில்லியமுக்கும் ஹரிக்கும் இடையில் பிரச்சினை வராமல் தடுக்க அரண்மனையின் திட்டம் | King Charles Coronation Keep William

Image: POOL/AFP via Getty ImagesSource link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.