வீடியோ வெளியிட்ட ஸ்மித்: கேகேஆர் அணி ரசிகர்களின் ரியாக்ஷனும், கேப்டன் அறிவிப்பும்

நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடரில் இணைவதாக ஆஸ்திரேலிய அணியின் ஸ்டாண்ட் இன் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில், கொல்கத்தா அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு, அந்த அணி ரசிகர்கள் ட்வீட் செய்து ட்ரெண்டாக்கி வந்தனர். இந்நிலையில், அந்த அணியின் கேப்டனாக நிதிஷ் ராணா அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் முதல்முறையாக மகளிர் ப்ரீமியர் லீக் கடந்த 4-ம் தேதி துவங்கி நேற்றுடன் நடைபெற்று முடிந்துள்ளது. இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை மகளிர் கிரிக்கெட் அணி முதல் கோப்பையை வென்றுள்ளது. இதனைத் தொடர்ந்து பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வருகிற 31-ம் தேதி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில், ஐபிஎல் 16-வது சீசன் துவங்க உள்ளது.
முதல் போட்டியில், சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில், 2023-ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் இணைவதாக ஆஸ்திரேலிய அணியின் ஸ்டாண்ட் இன் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “நமஸ்தே இந்தியா, உங்களுக்காக சில உற்சாகமான செய்திகளை வைத்துள்ளேன். 2023-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இணைகிறேன்” என்று தெரிவித்துள்ளார். 
இதையடுத்து கொல்கத்தா அணி ரசிகர்கள், அந்த அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு கூறி ட்ரெண்டாக்கி வந்தனர். ஏனெனில், முதுகுவலி காரணமாக முதல் பாதி லீக் போட்டிகளில் கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரோயாஸ் ஐயர் பங்குபெற வாய்ப்பில்லை என்பதால், அந்த அணி ரசிகர்கள் இவ்வாறு ட்ரெண்டாக்கி வந்தனர்.

Wow. With your remarkable form in BBL and India’s tour, the IPL will be become even more interesting. Hope you join KKR
— Nath Mishra (@nageshwarnath89) March 27, 2023

@KKRiders great choice for the captain. Hope it turns out to be true .
— vijayaram (@vijayaramrc) March 27, 2023

அத்துடன் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டியில், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியிருந்ததும் ஒரு காரணம். ஆனால், ஸ்டீவ் ஸ்மித் வீரராக இல்லாமல் ஐபிஎல் தொடரில் வர்ணனையாளராக களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Bro just captain KKR now that Iyer is not there, commentary mat kar!
— KS? (@BaachaBaachi) March 27, 2023

கடந்த 2021-ம் ஆண்டு டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக 8 போட்டிகளில் விளையாடிய ஸ்டீவ் ஸ்மித், 113 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடன் வெறும் 152 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இதையடுத்து 2022-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் அவர் எந்த அணியாலும் எடுக்கப்படாத நிலையில், 2023-ம் ஆண்டுக்கான மினி ஏலத்தில், ஸ்டீவ் ஸ்மித் தனதுப் பெயரை பதிவுசெய்யவில்லை. ஐபிஎல் தொடரில் மொத்தமாக 103 போட்டிகளில் விளையாடி, 2485 ரன்கள் எடுத்துள்ளார் ஸ்டீவ் ஸ்மித்.
இதற்கிடையில், கொல்கத்தா அணி ரசிகர்கள் ஸ்டீவ் ஸ்மீத்தை ட்ரெண்டாக்கி வந்தநிலையல், தற்போது கொல்கத்தா அணி நிர்வாகம், நிதிஷ் ராணாவை கேப்டனாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் ஐபிஎல் தொடரின் பாதி லீக் போட்டிகளில் ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடமாட்டார் என்பதையும், அந்த அணி நிர்வாகம் உறுதி செய்துள்ளது.

Official statement. @NitishRana_27 #AmiKKR #KKR #Nitish #NitishRana pic.twitter.com/SeGP5tBoql
— KolkataKnightRiders (@KKRiders) March 27, 2023

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.