Leo Vijay: லியோ பட நடிகர் பாபு ஆண்டனிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தளபதி விஜய்

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், மிஷ்கின், கவுதம் மேனன் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் லியோ.

முதல்கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்தினார்கள். இதையடுத்து படக்குழு காஷ்மீருக்கு சென்றது. அங்கு சில முக்கிய காட்சிகளை படமாக்கிவிட்டு மார்ச் 23ம் தேதி சென்னை திரும்பினார்கள்.

லியோ படக்குழுவினர் காஷ்மீரில் இருந்தபோது அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. அதை பார்த்த தளபதி ரசிகர்கள் பதறிப் போனார்கள். தளபதி உள்ளிட்ட படக்குழுவினர் பத்திரமாக இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் சமூக வலைதளத்தில் தெரிவித்த பிறகே நிம்மதி அடைந்தார்கள்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

லியோ படத்தில் பிரபல மலையாள நடிகரான பாபு ஆண்டனியும் நடித்து வருகிறார். தான் விஜய்யுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு பாபு ஆண்டனி கூறியிருப்பதாவது,

இளைய தளபதி விஜய் சாருடன் நான். அவர் மிகவும் தன்மையானவர், அன்பானவர். பூவிழி வாசலிலே, சூரியன், விண்ணைத் தாண்டி வருவாயா உள்ளிட்ட என் படங்களை பார்த்ததாகவும், நான் உங்களின் ரசிகன் என்றும் அவர் கூறினார். வாவ். நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன். அவரிடம் இது போன்று அன்பான வார்த்தைகளை கேட்டதும் வியப்பாக இருந்தது.

மேலும் லோகேஷ் சார், மற்றும் படக்குழுவினரும் பாராட்டினார்கள். அது ஒரு ஆசிர்வாதம். நான் விஜய் சார் மற்றும் பிறரை முதல் முறையாக சந்தித்தேன் என்றார்.

பாபு ஆண்டனி விஜய்யை பற்றி சொன்னதில் வியப்பதற்கு எதுவும் இல்லை. சக நடிகர்களை பாராட்டத் தவறாதவர் விஜய். தனக்கென்று கேரவன் இருந்தாலும் தன் காட்சி முடிந்ததும் கிளம்பிவிட மாட்டார். ஸ்பாட்டில் இருந்து ஷூட்டிங்கை பார்ப்பார்.

ஷூட்டிங்ஸ்பாட்டில் விஜய் அமைதியாக இருந்தாலும் சரியான நேரத்தில் பாராட்டுவார், ஜோக் அடிப்பார், சக கலைஞர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பார். இது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் தான் பாபு ஆண்டனிக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

லியோ படத்தின் 50 சதவீத காட்சிகளை படமாக்கிவிட்டாராம் லோகேஷ் கனகராஜ். காஷ்மீரில் படப்பிடிப்பு நடந்தபோது ஒரு முறை வீடியோ கசிந்தது. அதில் இருந்து எந்த வீடியோவும் கசிந்துவிடாமல் எச்சரிக்கையுடன் படப்பிடிப்பை நடத்தினார் லோகேஷ்.

இதற்கிடையே அஜித் ரசிகர்கள் நண்பர் விஜய்க்கு தொடர்ந்து நன்றி தெரிவித்து வருகிறார்கள். அஜித்தின் அப்பா சுப்ரமணியம் மார்ச் 24ம் தேதி காலமானார். நான்கு ஆண்டுகளாக பக்கவாதத்தால் படுக்கையில் இருந்த அவரின் உயிர் தூக்கத்திலேயே பிரிந்தது.

Ajith:அப்பா மரணம்: நண்பர் அஜித் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறிய விஜய்

இது குறித்து அறிந்த விஜய் மிகுந்த வேதனை அடைந்தார். உடனே அஜித் வீட்டிற்கு சென்று அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.

தான் அஜித் வீட்டிற்கு செல்வது ரசிகர்களுக்கு முன் கூட்டியே தெரிந்தால் அங்கு கூடிவிடுவார்கள். அது அஜித் குடும்பத்தாருக்கு அசவுகரியமாகிவிடும். அதனால் நான் அஜித் வீட்டிற்கு செல்வது யாருக்கும் முன்கூட்டியே தெரியக் கூடாது என தன் டீமிடம் தெரிவித்தாராம் விஜய்.

Vijay, Ajith: அஜித் வீட்டுக்கு செல்ல விஜய் போட்ட கன்டிஷன்: பாராட்டும் ஏ.கே. ரசிகர்கள்

விஜய் போட்ட உத்தரவு குறித்து அறிந்த அஜித் ரசிகர்கள் தளபதிக்கு மனதார நன்றி தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.