இல்லத்தரசிகளே.. உஷார்.! உரிமைத் தொகை பெற்று தருவதாக கூறி மோசடி.! 

இல்லத்தரசிகளுக்கான உரிமைத் தொகை பெற்று தர கணக்கு துவங்கி தருவதாக கூறி ஏமாற்றியுள்ளார். 

இல்லத்தரசிகளுக்கான ₹.1000 உரிமைத் தொகை பெறுவதற்கான தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு துவங்கித் தருவதாக, பழனியில் அஞ்சலக ஊழியர் ஒருவர் பல பெண்களிடம் தலா ரூ.200 வசூலித்து இருக்கின்றார்.

அ.கலையமுத்தூர் பகுதியில் இருக்கின்ற ரேஷன் கடைக்கு வருகின்ற பெண்களிடம், மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 பெறுவதற்கு அஞ்சலக சேமிப்பு கணக்கு அவசியம் என்று கூறி ஒவ்வொருவரிடமும் ரூ.200 பெற்று இருக்கின்றார்.

இந்த தகவல் பரவியதனால், அங்கு பெண்கள் பலரும் திரண்டுள்ளனர். முன்னதாக, வங்கி கணக்கு இருக்கின்ற பொழுது, அஞ்சலக சேமிப்பு கணக்கு எதற்கு துவங்க வேண்டும் என சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.