காந்தாரா நடிகரின் இயற்கை விவசாயம்.! இணையதளத்தில் வைரலாகும் புகைப்படம்.!

வெற்றிமாறன் இயக்கத்தில் பொல்லாதவன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கிஷோர். இவர் வில்லனாக மட்டுமல்லாமல் குணச்சித்திர வேடங்களிலும் பல படங்களில் நடித்திருக்கிறார். பொல்லாதவன் படம் தவிர்த்து  வெண்ணிலா கபடி குழு, சிலம்பாட்டம், கபாலி, பொன்னியின் செல்வன் மற்றும் வட சென்னை ஆகிய திரைப்படங்களில் இவரது கதாபாத்திரங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றன.

கர்நாடகாவைச் சார்ந்த இவர் சினிமா போக மீதமுள்ள நேரங்களில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். பெங்களூருவில் தான் இயற்கை விவசாயம் செய்வதன் மூலம் விளைவிக்கும் காய்கறிகளை விற்பனை செய்வதற்கென்று தனியாக கடையும் வைத்திருக்கிறார்.

இயற்கை ஆர்வலரான கிஷோர் இது தொடர்பான புகைப்படங்களை இணையதளங்களில் பகிர்ந்து அது தொடர்பாக ரசிகர்களுக்கும் சினிமா துறையினருக்கும் ஆர்வத்தை தூண்டி வருகிறார். இவரது இயற்கை விவசாயம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராகயிருக்கும் வெற்றிமாறனும் படப்பிடிப்பில்லாத நேரங்களில் இயற்கை விவசாயம் செய்வது வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கிஷோர் அவர் மட்டுமல்லாமல் அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோரையும் இயற்கை விவசாயத்தில் ஈடுபடுத்தி இருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.